தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் உலகின் குண்டான மனிதர்


உலகிலேயே குண்டான மனிதரான மானுயல் உரிப்புக்கும், அவரது நீண்ட நாள் காதலியான கிளாடியாவு்ககும் காதலர் தினமான இன்று திருமணம் நடைபெற்றது.
மெக்சிகோவைச் சேர்ந்தவர் மானுயல் உரிப்(46). உலகிலேயே மிகவும் குண்டான மனிதர் என்ற பெயர் பெற்றவர்.
கடந்த 2006ம் ஆண்டு மார்ச் மாதம் அவருடைய எடையைப் பற்றிய செய்தி தான் செய்தித்தாள்களில் பிரதானமாக இருந்தது. உடல் எடை காரணமாக அவர் 5 ஆண்டுகளாக படுக்கையை விட்டே எழுந்திரிக்கவில்லை. உடல் எடையும் கூடிக் கொண்டே போனது.
அவரது எடை 540 கிலோவைத் தொட்டபோது உலகிலேயே குண்டான மனிதர் என்று பெயர் பெற்றார். குண்டாக இருப்பதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் மருத்துவர்கள் உதவியால் அவர் தற்போது 190 கிலோ எடையை குறைத்திருக்கிறார். இருப்பினும் அவரால் படுக்கையை விட்டு எழுந்திரிக்க முடியவில்லை.
இந்நிலையில் அவர் உலக காதலர் தினமான இன்று தனது நீண்ட நாள் காதலியான கிளாடியாவை மணந்தார்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: