இன்று காலை 10 மணியளவில் சென்னை கொருக்குப்பேட்டை கேஎன்எஸ் டிப்போ அருகே இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் மனோகரன், ஆர்கே நகர் தொகுதி தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் திரண்டனர். நாய், கழுதையை கொண்டு வந்தனர். ரோமியோ என்று ஆண் நாய்க்கும், ஜூலியட் என்று பெண் கழுதைக்கும் பெயர் சூட்டினர். பின்னர் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். இந்து முன்னனி அமைப்பினர் 26 பேரை கைது செய்தனர். பின்னர் பயந்து போன நாயும், கழுதையும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தன. போலீசார் கழுதையை மட்டும் விரட்டி பிடித்தனர். இதை வேடிக்கை பார்க்க அப்பகுதியில் மக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் புளியந்தோப்பு குட்டி தம்பிரான் தெருவில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 11.30 மணியளவில் இந்து முன்னணி மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகுந்தன் தலைமையில் சென்னை மாநகர செயலாளர் முருகேசன் முன்னிலையில் 15 பேர் நாய் ஜோடிக்கு மாலை அணிவித்து பேண்ட் வாத்தியம் முழங்க திருமணம் செய்து வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. |
காதலர் தினத்துக்கு இந்து முன்னணி எதிர்ப்பு!! நாய் - கழுதைக்கு மாலை மாற்றி திருமணம்!!
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail