இந்தியாவின் கருப்பு பட்டியலில் இஸ்ரேலிய ராணுவ தொழிற்சாலை !



IMI one of six firms blacklisted by Indiaடெல்லி:இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான ராணுவ வர்த்தகம் சூடு பிடித்துள்ள நிலையில் இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளவாட உற்பத்தியாளரான இஸ்ரேல் ராணுவ தொழிற்சாலை (Isreal  military  industries ) இந்தியாவால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் ஒப்பந்தங்களை பெற லஞ்சம் தொடர்பான வேளைகளில்
ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளதால் இந்தியா இந்த முடிவினை எடுத்துள்ளது.
இஸ்ரேலின் நிறுவனம் உட்பட மேலும் ஐந்து நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்தி குறிப்பு குறிப்பிடுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தங்களுக்கு இந்த 6  நிறுவனங்களில் நடக்கும் தில்லுமுல்லுகள் குறித்து தெளிவான ஆதாரம் கிடைத்துள்ளதை வைத்து தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் ராணுவ தொழிற்சாலை தரைப்படை, கப்பற்படை மற்றும் வான் படைகளுக்கு தேவையான ஆயுதங்களை தயாரித்து அளிக்கும் நிறுவனம் ஆகும். மேலும் இந்நிறுவனம் இஸ்ரேலின் அரசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இஸ்ரேல் நிறுவனம் உட்பட கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் தாங்கள் ஒப்பந்தம் பெற சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்வதாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது என்று சி.பி.ஐ யும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: