மேடையில் மயங்கி விழுந்து கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் மரணம் !


V S Acharyaபெங்களூர்: கல்லூரி நிகழ்ச்சியின்போது மேடையில் மயங்கி விழுந்த கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா மரணம் அடைந்தார். கர்நாடக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா (71). அவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இன்று காலை மங்களூரில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக நிருபதுங்கா ரோட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்றார்.

அங்கு ந்டநத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் திடீர் என்று மேடையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு சாந்தா என்ற மனைவியும், 4 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர்.

கர்நாடக உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருக்கையில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டபோது பாஜக மூத்த தலைவரான ஆச்சார்யா 19 மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: