எலுமிச்சையிலிருந்து மின்சாரம் :மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை !


குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
 அதுபற்றிய விவரம் வருமாறு:-
தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின்  மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை
செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.
இந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
"எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழைய குற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன்.
அப்போதுதான் புது வழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதிலிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம் பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பிகளால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது.
மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்."
இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: