ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் பஞ்சாபி பாடல்!


 Rahman S Punjabi Track At The Olympics

ஒலிம்பிக் தொடக்க விழாவில், பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.
இளையராஜாவின் திரைப்பாடலும், ஏ.ஆர்.ரஹ்மானின் தனிப் பாடலும் லண்டன் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுவது அனைவரும் அறிந்தது. இளையராஜா கடந்த 80களில் இசையமைத்து, கமல்ஹாசன் நடித்த ராம் லட்சுமண் படத்தில் இடம் பெற்ற நான்தான் உங்கப்பண்டா என்ற துள்ளல் இசைப் பாடல் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுகிறது.
அதேசமயம், ரஹ்மான் புதிதாக இசையமைத்துள்ள பாடல் தொடக்க விழாவில் இடம் பெறுகிறராம். தொடக்க விழா கமிட்டியின் தலைவரான இயக்குநர் டேனி பாயில் விருப்பத்திற்கேற்ப இந்தப் பாடலை வடிவமைத்துள்ளாராம் ரஹ்மான். இது ஒரு பஞ்சாபி பாடலாம்.
இதுகுறித்து ரஹ்மான் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பஞ்சாபியில் அமைந்த இசைப் பாடல் இது. இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களின் தாக்கத்தை விளக்கும் வகையி்ல இது அமைந்துள்ளது. ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்தப் பாடல் இடம் பெறுகிறது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ரஹ்மானின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஒலிம்பிக்குக்காக ரஹ்மான் இசையமைத்திருப்பது உண்மைதான். இருப்பினும் அவருடைய பாடல் மட்டுமல்ல, வேறு பல பாடல்களும் இடம் பெறுகிறது என்றார்.
ஏற்கனவே பாயிலும், ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து பணியாற்றிய ஸ்லம்டாக் மில்லியனர் படம் ரஹ்மானுக்கு 2 ஆஸ்கர் விருதுகளைக் கொடுத்தது. அதன் பின்னர் 127 ஹவர்ஸ் படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினர். இப்போது ஒலிம்பிக் தொடக்க விழாவிலும் இவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.
ஏற்கனவே டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்காக ஏ.ஆர்.ரஹ்மானிடம் சிறப்பு தீம் சாங் ஒன்றைக் கேட்டிருந்தனர். அவரும் போட்டுக் கொடுத்தார். இருப்பினும் அது பெரிய அளவில் வரவேற்கப்படாமல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: