துபாய்: துபாய் ஈமான் அமைப்பு ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் தினமும் 3,000க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு தமிழகத்து நோன்புக் கஞ்சியினை வழங்கி வருகிறது. இப்பணியினை மேற்கொண்டு வரும் ஈமான் நிர்வாகிகளுக்கு 21.07.2012 அன்று மாலை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து வந்திருந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கோவை நந்தகுமார், பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலிக்கு ஏலக்காய் மாலையினை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து துணை பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஈடிஏ அஸ்கான் துணை பொது மேலாளர் அஹமது முஹைதீன், மனிதவள மேம்பாட்டு மேலாளர் சையது அபுதாஹிர், ஈமான் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத், காயல் யஹ்யா முஹ்யித்தீன், கீழை ஹமீது யாசின், கும்பகோணம் சாதிக், வி.களத்தூர் ஷர்புதீன், வி.களத்தூர் சாகுல் ஹமீது, திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன், கோவை இல்யாஸ், படேஷா பஷீர், மதுக்கூர் நூருல் அமீன், மணமேல்குடி அம்ஜத் கான், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.