ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தில் 10,000 பேருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் கொலை மிரட்டல் !



Kill-threat SMS a fake, authorities sayஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநில மக்களில் பலரது செல்போனில் இன்று வந்த எஸ்.எம்.எஸ் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.  குறிப்பிட்ட ஒரு இ-மெயில் முகவரிக்கு 5,000 டாலர் பணம் அனுப்பாவிட்டால் அவர்களைக் கொல்லப் போவதாக அந்த எஸ்.எம்.எஸ் மிரட்டியது. ‘உங்களைக் கொல்வதற்காக ஒருவர் எனக்கு பணம் கொடுத்துள்ளார். நீங்கள் 48 மணிநேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் எனக்கு 5,000 டாலர் அனுப்பவேண்டும். இதை போலீசிடமோ அல்லது வேறு யாரிடமோ கூறினால்
நீங்கள் கொல்லப்படுவீர்கள். killerking247@yahoo.com என்ற முகவரியில் தொடர்புகொண்டு உடனடியாக எனக்கு பணம் அனுப்பவும்’ என அந்த எஸ்.எம்.எஸ்-ல் கூறப்பட்டிருந்தது. 

நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த மர்ம எஸ்.எம்.எஸ்-ஐ அனுப்பியவர் யார் என்பது குறித்தும், அது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர். 

எனினும் இந்த எஸ்.எம்.எஸ். உண்மையில்லை எனக் கூறியுள்ள போலீசார், மக்கள் இந்த எஸ்.எம்.எஸ்-ஐ புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: