சீனாவில் உள்ள குயாங்சி மாகாண அரசாங்கம் வித்தியாசமான பரிசு ஒன்றை அறிவித்தருக்கிறது. அங்கு பாய்ந்தோடும் லியுஜியாங் நதியில் மனிதர்களை தாக்கும் சிறிய வகை அபாயகர மீன்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஆற்றில் இறங்கிய 2 பேரை இந்த மீன்கள் கொடூரமாக தாக்கின. இதில் பலத்த காயத்துடன் 2 பேரும் தப்பினார்கள்.
இதனை அடுத்து இந்த கொடூர மீன்களை உயிருடன் பிடித்தாலோ அல்லது சாகடித்தாலோ அவருக்கு பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடப்படும் ஒவ்வொரு மீனுக்கும் 180 டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.


