லண்டனில் இப்ஸ்விச் என்ற இடத்தில் நேக்டன் சாலையில் ஒரு வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஒரு பெண் தனது கார்டை பயன்படுத்தி ரூ.3 ஆயிரம் எடுத்தார். அப்போது அந்த இயந்திரத்தில் இருந்து 2 மடங்கு பணம் வந்தது.
இதனால் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்த பெண், இந்த தகவலை தனது நண்பர்களிடம் தெரிவித்தார். அது அப்படியே பலரிடம் பரவியது.
எனவே அதில் பணம் எடுக்க ஏராளமான பொது மக்கள் திரண்டதால் கூட்டம் அலை மோதியது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே, போலிசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ஏ.டி.எம் இயந்திரம் 2 மடங்கு பணம் தந்த விவகாரம் வங்கிக்கு தெரிய வரவே, உடனே ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து ஏ.டி.எம் இயந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்தினர்.
இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்த நபர்களை கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.