இந்தியான் பொருளாதார வளர்ச்சி 6% அல்லது 5% க்கு கீழே போய்விடுமாம்....

India likely to grow less than 6 pct in FY13டெல்லி: இந்தியான் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது அடுத்த ஆண்டு நிச்சயம் 6 விழுக்காட்டுக்குக் கீழேதான் இருக்கும் என்றும் இல்லை இல்லை..5 விழுக்காட்டுக்கு கீழே இருக்கும் என்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கருதுவதாக சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கி சார்பில் இந்தியாவின் பொருளாதார நிலைமை தொடர்பாக சர்வே எடுக்கப்பட்டது. மொத்தம் 125 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 72 விழுக்காட்டினர் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6 விழுக்காட்டுக்கு கீழே இருக்கும் என்றும் கூறியுள்ளனர். 20 விழுக்காட்டினர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5 விழுக்காட்டுக்கும் கீழே சரிந்துவிடும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் 2016-ம் ஆண்டில் முந்தைய நிலைமையான 9 விழுக்காட்டை இந்தியா எட்டிவிடும் என்று 85 விழுக்காட்டினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறுவதால் நாட்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் பொருளாதார வளர்ச்சியிலும் எதிரொலிக்கக் கூடும் என்கின்றனர்.
இந்திய ரூபாயின் மதிப்பு நடப்பு ஆண்டு செப்டம்பர் முடிவில் ரூ57 ஆக இருக்கும் என்று 40 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இது ரூ 55-57 என்ற அளவில்தான் இருக்கும் என்பது மற்றவர்களின் கணிப்பாக இருக்கிறது,
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: