வெளியான 4 மணி நேரத்தில் பில்லா 2 திருட்டு டிவிடி அவுட்!


அஜீத் குமார் நடித்த பில்லா படத்தின் திருட்டு டிவிடி, அந்தப் படம் வெளியான நான்கு மணி நேரங்களில் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது!
அஜீத்குமார், பார்வதி ஓமணக்குட்டன், புருனா நடித்துள்ள படம் பில்லா 2, இன்று உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் இன்று காலை சென்னையில் வெளியானது. ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் நேற்று இரவே வெளியாகிவிட்டது.
இதனால், படத்தின் திருட்டு டிவிடி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல, இந்தியாவில் படம் ரிலீசான நான்கு மணி நேரங்களுக்குள் சுடச் சுட பில்லா 2 படத்தின் டிவிடிக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.
இணையதளங்கள் சிலவற்றிலும் இந்தப் படம் வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது.
திருட்டு டிவிடி வெளியாகியிருப்பது பில்லா 2 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
கதாநாயகன் அஜீத் வரமாட்டேன் என அடம்பிடித்த நிலையில், படத்தின் விளம்பரங்களுக்கு பெரிய அளவில் செலவழித்த தங்களுக்கு, திருட்டு டிவிடி விவகாரம் பெரும் சிக்கலைத் தந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.
நாளை அல்லது அதற்கடுத்த நாள் அநேகமாக போலீசாரை சந்திக்கவிருக்கிறார்கள், திருட்டு டிவிடிக்கு எதிராக மனு கொடுக்க!
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: