நோன்பு கன்னியத்திற்குரிய மாதம். இம்மாதத்தில்தான் குர்ஆன் இறக்கப்பட்டது. இந்த மாதத்தில்தான் லைலத்துல்கத்ரு இரவுடைய நன்மை இருக்கின்றது. இந்த மாதத்தில் நாம் செய்கின்ற சிறு அமல்களுக்கு கூட பல மடங்கு நன்மைகளை அல்லாஹ் நமக்கு வழங்கின்றான். பாவமன்னிப்பு தேடுபவர்களுக்கு மன்னிப்பையும் வழங்குகிறான்.
இந்த மகத்துவம் நிறைந்த மாதத்தில் நாம் நன்மைகள் பல புரியவேண்டும் நோக்கத்தில் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உணவளிப்பது, திக்ரு செய்வது, அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி(ஸல்) காட்டித்தந்த வழிமுறைகளின் வழியில் நன்மைகள் அதிகமாய் செய்து இம்மையும் மறுமையிலும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் நோன்பு மாதத்தில் பள்ளிவாசலுக்கு பொருளுதவிகளும், அல்லாஹ்வின் வழியில் இருப்பவர்களுக்கு வழிகாட்டுதலையும் காட்டக்கூடிய அன்பு சகோதரர்களுக்கும் அல்லாஹ் ஈருலகத்திலும் நன்மைகள் புரிவான்.
யார் நோன்பாளிகளுக்கு உணவளிக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நோன்பாளிகளின் நன்மைகளை போலவே வழங்குகின்றான் என்றும் கூறுகின்றான்.
கடற்கரை முஹல்லாவாசிகள் மற்றும் வெளிநாட்டுவாழ் கடற்கரை முஹ்ல்லா சகோதரர்கள் மற்றும் அதிரை சகோதரர்கள் அதிகதிகமாய் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ரமலான் மாதங்களில் நன்மைகள் செய்துவருகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்குவான். அல்ஹம்துலில்லாஹ்...
முஸ்லிம் சகோதரர்கள் தங்களுடை அடுத்த தெரு முஹல்லா பள்ளிவாசலுக்கு சென்று இஃப்தார் செய்து சகோதரர்களிடையே சலாம் கூறி சலாத்தை பரப்புங்கள். சலாத்தை பரப்புவதும் வணக்கம்தான். இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் தங்களுடைய பங்களிப்பும் இதுபோன்ற அமர்க்கையில் இருக்கட்டும் .