மார்பகப் புற்றுநோயில் இருந்து தப்பிக்க வைட்டமின் 'டி' அவசியம்!

In Tests Vitamin D Shrinks Breast வைட்டமின் டி சத்து அதிகம் இருப்பவர்களுக்கு மார்பகப்புற்றுநோய், குடல் புற்றுநோய் தாக்காது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தையும் நீட்டிக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் மார்பகப்புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், குடல் புற்றுநோயினால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது நியூயார்க் பல்கலைகழக ஆய்வாளர்களின் ஆய்வு முடிவு ஒன்று. வைட்டமின் டி சத்து புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துவதோடு மார்பகப்புற்றுநோய், கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கிறது என்று கூறி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
மார்பகப்புற்றுநோய்க்கு மருந்து சாப்பிடுபவர்களைப் போல வைட்டமின் டி சத்துநிறைந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கும் புற்றுநோய் செல்கள் கட்டுப்படுகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எலிகளின் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதேபோல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு 30 நிமிடங்கள் வரை வெயிலில் நிற்கவைத்து சன்பாத் எடுக்கவைத்தனர். அவர்களுக்கு இருந்த புற்றுநோய் செல்களின் வளர்ச்சி படிப்படியாக குறைந்தது தெரியவந்தது.
முட்டைகள், புற ஊதாக்கதிர்களால் செறிவூட்டப்பட்ட காளான், சூரிய ஒளி இவற்றில் ஏராளமான வைட்டமின் டி உள்ளது. கேட்பிஷ், சல்மான் உள்ளிட்ட மீன் வகைகள் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. பசுமையான காய்கறிகள், கொட்டைகள், பட்டாணி, பயறு வகைகள் இவற்றியெல்லாம் அதிக அளவில் ஃபோலேட்டுகள் உள்ளன.
பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி9 இவை அடங்கிய ஃபோலேட்டுகள் புற்றுநோயைத் தடுப்பதில்லை. மாறாக ஃபோலேட்டுகள் இல்லாத உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: