அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் என்ற இடத்தில் உள்ள கடைக்குள் சென்று கொள்ளையடிக்க 53 வயது நபர் திட்டமிட்டார்.நள்ளிரவு நேரத்தில் கடையின் இரும்பு ரோலர் ஷட்டரை தூக்கி அதற்கு ஒரு இரும்பு துண்டை அண்டை கொடுத்து விட்டு நுழைந்தான். அப்போது இரும்பு துண்டு எதிர்பாராதவிதமாக விழுந்து விடவே ரோலர் கதவு கீழ் நோக்கி வந்து திருடனை தரையோடு அமுக்கியது. அவன் எவ்வளவோ முயன்றும் கதவு பிடியில் இருந்து மீள முடியவில்லை.
மறுநாள் காலை வரையில் ஏறத்தாழ 9 மணி நேரம் சிக்கி தவித்தபடி கிடந்தான். கடையை திறக்க வந்த மேலாளர் இதை கண்டு அதிர்ச்சியடைந்து போலிசுக்கு தகவல் கொடுத்தார்.
போலிசார் சென்று திருடனை கைது செய்தனர். கதவு விழுந்ததில் திருடனின் தலை பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

