தூக்கம் குறைந்தால் தாம்பத்யம் பாதிக்கும்

தினசரி 5 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. டீன் ஏஜ் இளைஞர்கள் தினசரி 7 மணிநேரம் தூங்குவது அவசியம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தூக்கம் என்பது மனிதர்களுக்கு அவசியமானது. உறங்கும்போதுதான் உடல் உறுப்புகள் ஓய்வு எடுக்கின்றன. செல்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் இன்றைக்கு மனிதர்கள் உறங்கும் நேரத்தை கணினியும், தொலைக்காட்சியும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. தூக்கம் குறைவதால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டது. அதேபோல் குறைவாக தூங்குவதால் மனிதர்களின் தாம்பத்ய வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. எல்லாருக்கும் தூக்கம் அவசியம். நீண்ட காலமாக 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், மந்தத் தன்மை ஏற்படும். செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கப்படும்.
சரியாக தூங்காத பெண்களுக்கு புற்றுநோய், குறிப்பாக மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிகளவு உடற்பயிற்சி செய்தாலும் சரியாக தூங்கினால் மட்டுமே அதன் முழு பலன் கிடைக்கும் என்கிறது அந்த ஆய்வு.
இதேபோல் தூக்கம் குறைவதால் மனிதர்களின் பாலுணர்வு சக்தி பாதிக்கப்படுகிறது. அதேபோல் தாம்பத்ய உறவின் போது ஆண்க்களுக்கு எழுச்சி நிலை ஏற்படுவதில் பிரச்சினை ஏற்படும் என்று சர்வதேச தூக்கம் தொடர்பான மாநாட்டில் பேசிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பிரேசில் நாட்டு பாலியல் நிபுணர் ஒருவர் பேசிய போது, தற்போது பணிச்சூழல் காரணமாக மனிதர்களின் தூங்கும் அளவு குறைந்து வருகிறது இது அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையை நிச்சயம் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள பிர்காம் யங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எரிக் எய்ட் தலைமையிலான குழுவினர் தூக்கம் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அமெரிக்கா முழுவதும் சுமார் 1,724 பள்ளி மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் தூங்கும் நேரம், தேர்வுகளில் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடந்தது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர் எரிக் கூறுகையில், ‘16 வயதுள்ள ஒருவருக்கு 9 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று முன்பு நம்பப்பட்டது. அவர்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதும் என தற்போது தெரியவந்துள்ளது. வயது ஏற ஏற தூக்கத்தின் அளவை இன்னும் குறைக்கலாம். 10 வயது குழந்தைகள் 9 மணி நேரமும், 12 வயதினர் 8 மணிநேரமும், டீன்ஏஜ் வயதினர் 7 மணி நேரமும் தூங்குவது சரியான அளவு என்றார். தினமும் 7 மணி நேரம் தூங்கும் டீன்ஏஜ் பருவத்தினர் கல்வி கற்பதில் சிறந்தவர்களாக உள்ளனர் என்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கண்டுபிடித்துள்ளனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: