முலாயம் போட்ட ஓட்டு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிப்பு !



 President Poll Ec Cancels Mulayam Singh Yadav Vote
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் அளித்த வாக்கை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் முதலில் எதிர்க்கட்சி வேட்பாளர் பி.ஏ.சங்மாவுக்கு வாக்களித்துவிட்டார். பின்னர் அதை
கிழித்துப் போட்டுவிட்டு வேறு ஒரு வாக்குச் சீட்டு வாங்கி பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்தார்.
இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பி.ஏ.சங்மா தரப்பு சும்மா இருக்குமா? முலாயம்சிங் முதலில் போட்டது எங்களுக்குத்தான்.. அதனால் அவரது வாக்கை எங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்தனர். ஆனால் அப்படி செய்ய முடியாது என்று கூறிய தேர்தல் ஆணையம் முலாயம்சிங் வாக்களித்ததே செல்லாது- அவரது வாக்கு நிராகரிக்கப்படுவதாக அறிவித்துவிட்டது.
மொத்தம் 5,48, 507 வாக்குகள் பெறுபவர்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற முடியும். தற்போது முலாயம்சிங்கின் ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டதால் 708 வாக்குகளை இழந்துவிட்டார் பிரணாப் முகர்ஜி. குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22-ந் தேதி எண்ணப்படுகின்றன. அதற்கு முன்பு இன்னமும் என்ன கூத்துகள் வருகிறதோ?
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: