'ஏ' ரகசிய அறையில் அரிய ரத்தினங்கள்: மதிப்பிட முடியாமல் மதிப்பீட்டு குழு திணறல்

 Rare Gems Found Vault Of Padmanabhaswamy Temple திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவிலின் ஏ ரகசிய அறையில் உள்ள அரிய ரத்தினங்களை மதிப்பிட முடியாமல் மதிப்பீட்டு குழு திணறி வருகிறது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பல லட்சம் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாகக் கருதப்படும் ஏ ரகசிய அறை கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதில் 55 கிலோ எடையுள்ள தங்க அங்கிகள், நீளமான தங்க சங்கிலி மற்றும் ரத்தின மாலைகள், தங்க கிரீடங்கள் உள்பட ஏராளமான அரிய பொக்கிஷங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் எடை குறைவான பொருட்களின் மதிப்பை கண்டறியும் பணி நடந்து வருகிறது. பழமை, மதிப்பை கண்டறிவதற்காக ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து அதிநவீன உபகரணங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்க சங்கிலிகளின் மதிப்பை கண்டறியும் பணி நடந்து வருகிறது. நேற்று வரை 80 தங்க சங்கிலிகள் கணக்கெடுக்கப்பட்டன. ஒவ்வொரு தங்க சங்கிலியிலும் உள்ளங்கை அளவு உள்ள லாக்கெட்டில் 180 ரத்தின கற்கள் வரை பதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லும் தனித்தனியாக பரிசோதிக்கப்படுகிறது.
ஒரு சங்கிலியை பரிசோதிப்பதற்கே பல மணி நேரம் ஆகிறது. சங்கிலியில் பதிக்கப்பட்டுள்ள ரத்தின கற்கள் அனைத்தும் மதிப்பீட்டு குழுவினர் எதிர்பார்த்ததை விட மிக பழைமை வாய்ந்ததாக உள்ளன. தற்போது கிடைக்கும் ரத்தினங்களை விட இந்த ரத்தினங்கள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. இது போன்ற ரத்தினங்கள் வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பை கண்டறிய முடியாமல் மதிப்பீட்டு குழுவினர் திணறி வருகின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: