மனைவி கொடூரக் கொலை... பேராசிரியரின் குடும்பமே கைதாகிறது!


சென்னை: சென்னை அருகே தனது மனைவியை கொடூரமாகக் கொன்று புதைத்த வழக்கில் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியரின் குடும்பத்தினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் ஒருவர் ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஆவார்.
சென்னை அருகே படப்படையில் பொறியியல் கல்லூரியில் பேராசரியராக இருந்தவர் நடராஜன். இவர் தான் கொண்டிருந்த கள்ளக்காதல் அசிங்கங்கள் தனது மனைவி விஜயலட்சுமிக்குத் தெரிய வந்ததால் அவமானமடைந்து மனைவியை சென்னைக்கு வரவழைத்துக் கொலை செய்து விட்டார். மனைவியை இதயம், நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் 11 முறை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார் நடராஜன். பின்னர் உடலைப் புதைத்து விட்டார்.
இவரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இவருடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தவரும், நடராஜன் பணியாற்றிய அதே கல்லூரியில் எம்டெக் படித்து வருபவருமான சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக மார்க் போடுகிறேன், வேலையும் வாங்கித் தருகிறேன் என்று கூறியே இவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் நடராஜன். இவரை போலீஸார் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி தற்போது சேலம் மகளிர் காப்பகத்தில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் நடராஜனின் தந்தை நல்லுச்சாமி, தாயார் அமிர்தம், தங்கை ரேவதி, ரேவதியின் கணவரான தர்மலிங்கம், நடராஜனின் சித்தப்பாவான ஓய்வு பெற்ற டிஎஸ்பி சின்னப்பன் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: