ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்களுக்கு பிடித்த பிரபல கார் நிறுவனங்களின் பெயரையே சூட்டியுள்ளனர் தாய்லாந்தை சேர்ந்த பெற்றோர். தாய்லாந்தை சேர்ந்தவர் டூவான்சனோக் வாங்வித்தயாசுகுல்(29). இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், விடாத முயற்சியாலும், தீவிர சிகிச்சையாலும் டூவான்சனோக் கருத்தரித்தார்.
பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது கருவில் 6 குழந்தைகள் வளர்வது தெரிந்தது. இதனால், அவர் பெரு மகிழ்ச்சியடைந்தார்.
இந்த நிலையில், கடந்த மே மாதம் அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தது. 3 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளையும் அவர் பெற்றெடுத்தார். ஆனால், குழந்தைகள் சராசரி எடையைவிட குறைவாக இருந்ததால் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றன.
இந்த நிலையில், பிறப்புச் சான்றிதழ் வாங்குவதற்காக தனது குழந்தைகளுக்கு பிரபல கார் நிறுவனங்களான பிஎம்டபிள்யூ மினி, ஃபியட், பார்ச்சூன், போர்ஷே, வோக்ஸ்வேகன் மற்றும் ஆடி ஆகிய கார் நிறுவனங்களின் பெயர்களையே செல்லப் பெயர்களாக சூட்டியுள்ளனர்.
தாய்லாந்தில் குழந்தைகளுக்கு முதலில் செல்லப் பெயர்களை கொடுத்து பிறப்பு சான்றிதழ் வாங்கிக் கொள்ளலாம். பின்னர் அவர்களுக்கு சூட்டப்படும் நிஜப் பெயர்களை பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்து கொள்ள அங்கு அனுமதி வழங்கப்படுகிறது.