டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 12 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.அதே போல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. இனி சிலிண்டர் ரூ.386.50க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநில அரசுகளின் வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் பெட்ரோல் விலை நேற்று முன்தினம் தான் லிட்டருக்கு 70 பைசா உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ. 1.95 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக 62 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் டீசல் விலை 12 பைசா மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.