ரோஹிங்கியா அட்டூழியங்களை தடுத்து நிறுத்த தலையிடுங்கள்: இந்திய பிரதமருக்கு முஸ்லிம், பெளத்த அமைப்புகள் கோரிக்கை !

End Rohingya Atrocities; Muslims, Buddhists Urgeடெல்லி:மியான்மரின் ராக்கேன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த இந்திய அரசுதலையிட வேண்டும் என முஸ்லிம், பெளத்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.இந்திய முஸ்லிம் மாணவர் அமைப்பின்(MSW) பொதுச்செயலாளர் ஷாநவாஸ் வர்ஸி, ஆல் இந்திய பெளத்த கவுன்சிலின் தலைவர் கிஷோர் ஜக்தாப், பாரத் பச்சாவோ அந்தோலான் அமைப்பின் தலைவர் ஃபெரோஸ்
மிதிபோர்வாலா ஆகியோர் கையெழுத்திட்டு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:
‘மியான்மரில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் அட்டூழியங்கள் குறித்து ஏராளமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இச்செய்திகள் இந்தியாவில் வாழும் பெருவாரியான முஸ்லிம் மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் இன அழித்தொழிப்புக் குறித்து அமைதியை விரும்பும் இந்திய மக்களும் கவலைக் கொண்டுள்ளனர். மியான்மரில் நடக்கும் இப்படுகொலைகள் நீதி, அமைதி, மனிதநேயத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது. அண்டைநாடு என்ற முறையிலும், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சக்தி என்ற நிலையிலும் அமைதி நிலைநாட்டும் நாடாக திகழ்ந்து சிறுபான்மை முஸ்லிம்களை கொன்றொழிப்பதை தடுத்து நிறுமாறு அந்நாட்டு அரசை வலியுறுத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது.
இந்திய அரசு இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டால் தெற்காசியா பிராந்தியத்திலும், உலக அளவிலும் இந்தியாவின் மதிப்பு உயரும். ஆகவே இந்த பிரச்சனையை மிக கவலைக்குரிய அவசரமாக கருதி மியான்மர் அரசுக்கு கோரிக்கை விடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதன் மூலம் உதவியற்ற ரோஹிங்கியா முஸ்லிம்களின் உயிரும், உடமைகளும், சுதந்திரமும் பாதுகாக்கப்படும்’ இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: