ஆதி மனிதனின் முழுமையான முதல் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு!

 Most Complete Pre Human Skeleton Discovered Scientists பிடித்துள்ளனர். இது கண்டுபிடிக்கப்பட்டதே பெரும் சுவாரஸ்யமானதாகும். தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரின் வடக்கே ஒரு பாறைப் பகுதியில் 2008ம் ஆண்டு இந்த எலும்புக்கூட கண்டுபிடிக்கப்பட்டது. இதை முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்காக ஆய்வகத்திற்குக் கொண்டு சென்றனர்.
அந்தப் பாறைப் பகுதி ஆய்வகத்திலேயே இருந்து வந்தது. அதில் என்ன இருக்கிறது என்பது கூட சரியாக அனுமாணிக்க முடியவில்லை. இந்தநிலையில் அந்தப் பாறையில் ஒரு பல் ஒட்டிக் கொண்டிருப்பதை ஆய்வக உதவியாளரான ஜஸ்டின் முகாங்கா பார்த்தார். இதை விஞ்ஞானிகளிடம் அவர் சொன்னார்.
இதையடுத்து அந்த பாறையை தீவிரமாக ஆராய்ந்தனர். அப்போதுதான் அந்தப் பாறையில் ஒரு மனிதனின் எலும்புக் கூட பாசில் வடில் ஒட்டிய நிலையில் புதைந்திருந்தது தெரிய வந்தது.
இந்த மனிதனுக்கு நீண்ட கால்கள், கைகள் உள்ளன. மூளை சிறிதாக உள்ளது. முதல் வரிசை மனித இனத்தைச் சேர்ந்தவனாக இந்த ஆதி மனிதன் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே இந்த மனிதன் குறித்த ஆய்வு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த எலும்புக் கூட்டுக்கு கரபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மனின் இறந்தபோது அவனுக்கு 9 முதல் 13 வயதுக்குள் இருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த எலும்புக் கூட கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை உலக பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. மனித குலத்தின் தொட்டில் என்றும் இப்பகுதி விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. காரணம், இங்கு பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துவண்ணம் உள்ளன. மனிதனின் தோற்றம் குறித் பல முக்கியத் தகவல்களும் இந்தப் பகுதியில் ஏற்கனவே கிடைத்துள்ளன.
தற்போது ஒரு முழுமையான ஆதி மனிதனின் எலும்புக் கூட கிடைத்திருப்பதால் இப்பகுதியில் மேலும் தீவிர சோதனைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: