பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மாட்டோம்: பெட்ரோலியத்துறை அமைச்சர்


பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மாட்டோம்: பெட்ரோலியத்துறை அமைச்சர்
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் கூடியவிரைவில் உயர்த்தப்படும் என தகவல்கள் வந்தன.
 
உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த விலை உயர்வு தேர்தலுக்குப் பின் இருக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இந்நிலையில் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயரும் என்பது ஊகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் வெறும் கற்பனை செய்தி. இதில் உண்மை ஏதுமில்லை.
 
தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றார். இது 5 மாநில தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நடத்தும் கண்துடைப்பு நாடகம் இது என எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: