உலகிலேயே மிகப் பழமையான அணுமின் நிலையம் நேற்றைய தினத்துடன் பாவனையில் இருந்து மூடப்பட்டது.
44 ஆண்டுகளாக சேவையில் இருந்த, பிருத்தானியவின் South Gloucester பகுதியில் உள்ள அணுமின் நிலையம், 1967 ஆம் ஆண்டு காலப்பகுதியில், உலகிலேயெ முதலாவதாக அணு சக்தியில் இருந்து மின் உருவாக்கும் நிலையமாக காணப்பட்டது.
தற்பொழுது பாவனைக்கு உதவாது என மூடப்பட்ட இந் நிலையத்தை துப்பரவாக்க சுமார் 90 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 2092 க்கும்2101 க்கும் இடைப்பட்ட ஆண்டுப் பகுதியில் தான் அங்குள்ள அணுக்கழிவுகளை அப்புறப்படுத்தி முடிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதற்கு சுமார் 954 மில்லியன் பவுன்ஸ்கள் தேவைப்படுமெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.



