ஒரே குடும்பத்தில் 8 பேர் மாயம்

கோவை மாவட்டம், நெகமம் அருகில் உள்ளது செட்டியக்காபாளையம். இந்த ஊரை சேர்ந்தவர் முருகேசன், இவரது தயார் வேலாத்தாள். முருகேசன் அவரது மனைவி, மகள், மற்றும் சகோதரிகள் இருவர் மற்றும் தாயார் என்று குடும்பத்தினர் அணைவரும் கடந்த 28ம் தேதி அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு ஈரோடு அருகில் உள்ள கனபதிபாளையம் என்ற ஊரிலிருக்கும் தங்களின் குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக் சென்றுள்ளார்கள்.

ஆனால், முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த செட்டியக்காபாளையத்தில் உள்ள அவரது உறவினர்கள் சிலர் கனபதிபாளையத்துக்கு சென்று விசாரித்து விட்டு வந்துள்ளனர். ஆனாலும், முருகேசனை பற்றியும், அவரது உறவினர்களை பற்றியும் எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில் முருகேசனின் உறவினர் காளிமுத்து என்பவர், தனது உறவினர்களை காணவில்லை என்று நெகமம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து நெகமம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டுபேர் காணாமல் போனது கோவை மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: