அபூர்வமான retro கார்களின் தொகுப்பு



தற்போது காணப்படும் மனிதர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் பல வண்ணங்களில் அழகாகவும், ஆடம்பரமாகவும் காணப்படுகின்றன.
ஆரம்ப காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய வித்தியாசமான வடிவங்களில் காணப்படும் கார்களைப் படத்தில் காணலாம்.


சீனாவில் தூக்கி எறியப்பட்ட கைபேசியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட 1500 கிலோ தங்கம்



சீனாவில் தூக்கி எறியப்பட்ட 100 மில்லியன் கைபேசிகளில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி போன்றவைகளும் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு கைபேசிகள் தூக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் கைபேசிகள் தூக்கி எறியப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவில் அமோக விற்பனையாகும் சிறுநீரில் வேக வைத்த முட்டை



சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் டாங்யாங் என்ற இடத்தில் பள்ளி சிறுவர்களின் சிறுநீரில் வேக வைக்கும் முட்டை வியாபாரம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இங்குள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் கல்வி பயில்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர்களுடன் தெருவோர வியாபாரிகளும் காத்திருக்கின்றனர்.
இவர்கள் பள்ளி கழிப்பறையில் தாங்கள் வைத்துள்ள போத்தல்களை எடுத்துச்சென்று அதில் நிரம்பியுள்ள சிறுநீரை வைத்து முட்டையை அவித்து விற்பனை செய்கின்றனர். அதுவும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சிறுநீர் மட்டுமே சேகரிக்கின்றனர்.
நூறாண்டு பாராம்பரிய உணவு: இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது, டாங்யாங் நகரில் பல 100 ஆண்டுகளாக இந்த உணவு வழக்கத்தில் உள்ளது. நுகர்வோர்கள் இதை விரும்பி உண்கின்றனர்.
தெருவோரத்தில் நடந்து போகும் போது இந்த முட்டையின் வாசனை நுகர்வோரை கவர்ந்திழுக்கிறது. மேலும் மூட்டுவலி, சன்ஸ்ரோக், இரத்தம் சீராகுதல், உடல் வலி போன்ற நோய்களை இந்த உணவு நீக்கவல்லது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஆட்டையைப் போட முயன்ற நபரை ஆப்பு வைத்த கமெரா!!



எல்லா இடங்களிலும் கமெரா பொருத்தி இருக்கே! இதை அறியாமல் ஆட்டையைப் போட முயன்ற நபரை கமெரா காட்டிக்கொடுத்துவிட்டது

கண்களைக் கவரும் ஆடம்பரமான இருப்பிடம்



பொதுவாக ஆரம்ப காலத்தில் குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் தற்போது நவீன உலகத்தின் மாற்றத்தின் காரணமாக பல ஆடம்பரமான இருப்பிடத்தினை தன்னுடைய விருப்பத்தின் பெயரிலே அமைக்கின்றனர்.
அவ்வாறு கண்களைக் கவர்ந்து காணப்படும் ஆடம்பரமான இருப்பிடத்தின் சிலவற்றைப் படத்தில் காணலாம்.