சென்னை: நம்மிடையே ஒற்றுமை இல்லாததால்தான் சட்டசபைத் தேர்தலிலும், பின்னர் வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி அடைய நேரிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி வருத்தத்துடன் கூறியுள்ளார்.சென்னையில் இன்று நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்துள்ளது. அப்போது குறுக்கிட்டு கருணாநிதி பேசியுள்ளார். கருணாநிதி கூறுகையில், முதலில் நம்மிடம் ஒற்றுமை இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை இல்லாததால்தான் தேர்தலில் நாம் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
திமுகவுக்குத் தோல்வி புதிதல்ல. கட்சி மீது நம்பிக்கை வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். திமுகவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் திமுகவுக்கு வலிமை கூடும் என்றார் கருணாநிதி.