பென்சில்வானியா அடுத்துள்ள வேனஸ்பார் என்ற இடத்தில் உள்ள வங்கிற்கு 49 வயது மதிக்கத்தக்க பெண் துப்பாக்கியுடன் சென்று கணக்காளரை மிரட்டி பணம் கொள்ளையடித்தார்.
உடனே பொலிசார் சென்று வங்கியில் இருந்த கண்காணிப்பு கமெராவை ஆராய்ந்தனர். மேலும் ஊழியர்களிடம் விசாரிக்கும் போது அவர்களில் ஒருவர், தனக்கு கொள்ளைக்காரப் பெண் பற்றிய அடையாளம் தெரியும் என்றும், அங்குள்ள ஆலயத்திற்கு வழக்கமாக வரக்கூடியவர் என்றும் கூறி பெண்ணின் பெயரையும் தெரிவித்துவிட்டார்.
மேலும் இதனை அடுத்து கொள்ளைக்காரியை பொலிசார் எளிதாக மடக்கி பிடித்தனர். கொள்ளையடித்தது ஏன்? என்று விசாரிக்கும் போது, தனக்கு பல் இல்லை. செயற்கை பல் கட்டுவதற்கு பணம் இல்லாததால் இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்து பொலிசாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.