குஜராத்:மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டசபையில் ஏன் தாக்கல் செய்யவில்லை? – உயர்நீதிமன்றம் கேள்வி


gujarat-vapiஅஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை தொடர்பான தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கையை ஏன் சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை? என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் மோடி அரசுக்கு கேள்வி விடுத்துள்ளது. மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யாதது மனித உரிமை மீறல் என நீதிமன்றம் கருத்து
தெரிவித்தது. அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யாதது குறித்து மாநில அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என ஆக்டிங் தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா, நீதிபதி ஜெ.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் கூறியது.
2005-ஆம் ஆண்டு என்.சி.ஹெ.ச்.ஆர்.ஒ(தேசிய மனித உரிமை கமிஷன்) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை கிடைத்து இவ்வளவு காலம் கழிந்த பிறகும் சட்டசபையில் அதனை தாக்கல் செய்யாதது 1993-ஆம் ஆண்டு மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தை மீறிய செயலாகும் என பெஞ்ச் சுட்டிக்காட்டியது. கலவரத்தில் கொல்லப்பட்ட 500 க்கும் அதிகமான மத நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என கடந்த புதன்கிழமை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மதநிறுவனங்களை மட்டும் புறக்கணித்துவிட்டு வீடுகளுக்கும், வியாபார ஸ்தாபனங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்குவதற்கான மோடி அரசின் தீர்மானம் அரசியல் சட்டத்தின் 14,25,26 பிரிவுகள் உறுதி அளிக்கும் அடிப்படை உரிமைகளை மீறிய செயலாகும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: