இக்கட்டுரை வெளியான மறுநாள் வன்னியர்கள் நிலை: தினமலர் தரும் விளக்கம்" எனும் செய்தியை வெளியிட்ட தினமலர். "சுயநலமாக செயல்படும் ஒரு சிலரின் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டும் வகையில் தான், 'வாழ்வாதாரத்தை உயர்த்த கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள்'' என்ற தலைப்பிலான கட்டுரை வெளியானது. யாருடைய மனதையும் புண்படுத்தும்படி
இந்த கட்டுரை வெளியிடப்படவில்லை. வன்னியர்களின் பின்தங்கிய நிலையை வெளிப்படுத்தும் வகையில் வெளியான இந்த கட்டுரை, சிலருடைய மனதை புண்படுத்தியதாக அறிகிறோம். அப்படி யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறோம்இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கோ.க.மணி தலைமையில் சாதி மோதலை தூண்டும் விதமாக செய்தி வெளியிட்டுள்ளார்கள் என்று தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு தந்துள்ளனர்
இந்நிலையில் வன்னியர்களைத் திட்டமிட்டு அவமானப்படுத்தும் நோக்கத்தில் அந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
அதனையொட்டி தைலாபுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அவசர கூட்டம் நடந்தது அதில் பேசிய வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு. எம்.எல்.ஏ, பேசுகையில் வன்னியர்கள் பற்றி தினமலர் அவதூறாக எழுதியுள்ளது
இதை படித்துவிட்டு வன்னிய மக்கள் நிறைய பேர் எனக்கு போன் செய்து பேசினார்கள். என்ன செய்யலாம் என கேட்டனர். மாவட்டந்தோறும் வன்னியர்கள் சார்பில் தினமலர் நாளிதழ் மீது வழக்கு போடுங்கள் என கூறினேன். அதன் அடிப்படையில் வழக்குகள் தொடர்ந்து வருகின்றனர்.
அதிக பட்சமாக திருவண்ணாமலையில் 30 வழக்கு இன்று வரை தொடர்ந்துள்ளனர். எல்லா மாவட்டங்களிலும் வழக்கு தாக்கலாகி வருகிறது என்றார்.
தினமலர் நாளிதழை கண்டித்து வரும் 10 ந்தேதி ஒவ்வொரு தாலுகா அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்துவது என அக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தினமலர் நாளிதழை கண்டித்து வன்னியர்கள் வாழும் கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் கண்டன சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன