4 வயது சிறுவனை சித்ரவதை செய்த பெற்றோர்



குழந்தையை வலிமையானவனாக உருவாக்க தனது 4 வயது மகனை நடுங்கும் பனியில் ஓடவிட்டு பயிற்சி அளித்த சீன தந்தைக்கு பலதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீனாவின் நான்ஜிங் மாகாணத்தை சேர்ந்தவர் ஹி. இவர் விடுமுறையில் குடும்பத்துடன் நியூயார்க் சென்றிருந்தார். அங்கு கடும் பனிப்பொழிவு நிலவியது.
சாலைகளில் பனி மூடிக் கிடந்தது. தனது 4 வயது மகனை அந்த பனியில் ஓடவிட்டு பயிற்சி அளித்தார். அந்த சிறுவன் குளிர் தாங்காமல் தந்தையை நோக்கி ஓடுகிறான். தன்னை தூக்கிக் கொள்ளும்படி அலறுகிறான்.
ஆனால் குழந்தையின் தாயும் அதை பார்த்து சும்மா இருக்கிறார். மேலும் பனியில் கீழே உட்காரும்படி தாயும் தந்தையும் அவனை கட்டாயப்படுத்துகின்றனர். இந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்துள்ளார் ஹி. அதை இணையத்தளத்திலும் வெளியிட்டுள்ளார்.
குழந்தையை சித்ரவதை செய்ததை ஆயிரக்கணக்கானோர் இணையத்தளத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஹியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஹியின் செயலாளர் ஜின் கூறுகையில், தனது மகனை வலிமையுள்ளவனாக மாற்றவே பயிற்சி அளித்தார் ஹி. இதில் தவறு இல்லை.
இன்னும் சொல்ல போனால் ஹியின் மகன் ஒரு வயதாக இருக்கும் போது, 21 டிகிரி செல்சியஸ் தண்ணீரில் நீச்சல் பயிற்சி பெற்றுள்ளான் என்று விளக்கம் அளித்துள்ளார்.
எனினும் குழந்தைகளை மகிழ்ச்சியாக இருக்க விடவேண்டும். பயிற்சி என்ற பெயரில் சித்ரவதை செய்ய கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: