வெண்ணெயை வைத்துக் கொண்டு, நெய்க்கு அலையும் ஜெ. அரசு: கருணாநிதி

Karunanidhiசென்னை:  கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு தமிழக அரசு ஆதரவாக உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக பொருளாளர் முக ஸ்டாலினின் 60வது பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டையில் நடந்த தென் சென்னை திமுகவினர் சார்பில் ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு தன் கையால் உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, 

திமுக ஆட்சியில் அங்கும், இங்குமாக மின் தட்டுப்பாடு இருந்ததை நான் மறுக்கவில்லை. ஆனால் மின் தட்டுப்பாடு பிரச்சனையை தீர்க்க டெல்லிக்கு அலைந்து பல மாநில அரசுகளுடன் பேசி மின்சாரம் வாங்கி அதை தமிழகத்திற்கு கொண்டு வந்து மக்களை நிம்மதியாக இருக்கச் செய்தோம்.

ஆனால் இன்று அப்படி இல்லை. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் காரியம் அல்லவா இங்கு நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அந்த அணுமின் நிலையத்தை மூடக்கோரி போராட்டம் நடத்துபவர்களுக்கு தமிழக அரசு ஆதரவாக உள்ளது. 

கூடங்குளத்தில் போராட்டக்காரர்களை அரசு தூண்டிவிடுகிறதா அல்லது பின்னால் இருந்து கொண்டு உதவி செய்கிறதா என்றால் அதற்கு பதில் இல்லை. அவர்கள் மௌனம் சாதித்தாலும் உலகம் அதை உணர்ந்து கொண்டிருக்கிறது. 

கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடந்த 8 மாதமாக இயங்க வைத்திருந்தால் இந்நேரம் இருள் அகன்றிருக்கும். அனைவருக்கும் மின்சாரம் கிடைத்திருக்கும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் இதுவரை எந்த ஆபத்தாவது ஏற்பட்டதுண்டா? இல்லையே. அப்படி இருக்கையில் கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அரசு ஏன் மறைமுகமாக ஆதரவளித்து வருகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. 

எத்தைனையோ குழுக்கள் அமைத்து அவை கூடங்குளத்தில் ஆய்வு நடத்தி கூறியதையெல்லாம் கேட்க போராட்டக் குழுவினர் தயாராக இல்லை. இந்நிலையில் தமிழக அரசு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழு தனது ஆய்வறிக்கையை நேற்று சமர்பித்தது. அதன் பிறது கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் இதுவரை நடத்ததின் ரகசியம் தான் என்ன என்றார். 

"குஜராத்" பத்து ஆண்டுகளுக்கு முன் !


 27 பிப்ரவரி 2002"ஆம் நாள் துரதிஷ்டவசமான நாளாக குஜராத் மக்களுக்கு அமைந்தது. கோத்ரா இரயில் நிலையம் அருகில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து ஏற்பட்டு அயோத்தியிலிருந்து அஹமதாபாத் வந்து கொண்டிருந்த கரசேவகர்கள் 59 பேர்  உயிரிழந்தனர். எவ்வாறு இரயிலில் தீ விபத்து ஏற்பட்டது? எவ்வாறு அவர்கள் உயிரிழந்தார்கள் என்பது பற்றிய தெளிவான விஷயங்கள் இன்று வரை தெரியவில்லை. ஒரு தரப்பினர் இதை விபத்து தான் என்றும் வாதிட மறு தரப்பினரோ பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தின் உதவியுடன் வேண்டுமென்றே எஸ்-6 பெட்டியின் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைத்து கொழுத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.
அப்போது இரயில்வே துறை மந்திரியாக இருந்த லல்லு பிரசாத் யாதவ் இது தொடர்பாக முழு விசாரணையை மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பானர்ஜியை நியமித்தார். அவரும் இது தொடர்பாக முழு விசாரணையை மேற்கொண்டு இது விபத்து தான் என்றும் யாரும் திட்டமிட்டு வெளியிலிருந்து பெட்ரோல் ஊற்று தீ வைத்ததற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என்று திட்டவட்டமாக தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார், எனினும் இது தொடர்பான முழு அறிக்கையும் மர்மமாகவே உள்ளது, காரணம் இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஹுஸைன் உமர் செசன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சரியான சாட்சிகள் இல்லை என்று கூறு அவரை சமீபத்தில் விடுதலை செய்தனர். அதே சமயம் 31 நபர்களை குற்றவாளிகள் என்று தீர்பளித்து ஆயுள் தண்டனை வழங்கி 63 நபர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்தது. இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நடைபெற்று அடுத்த 24 மணி நேரத்திற்குள் எவருமே எதிர்பார்த்திராத அளவிற்கு மிகப்பெரும் இனப்படுகொலை அரங்கேறியது. 28 ஆம் தேதி அஹமதபாத்தில் மட்டும் 200ருக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கலவரக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்தின் முதல் நாள் அன்று குல்பர்கில் 63 மக்களும், நரோடாபாட்டியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். வடக்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத் மாவட்டங்களில் கலவரங்கள் வேகமாக பரவியது. அதேசமயம் தென் குஜராத் மாவட்டங்கள் கலவரத்தால் அவ்வளவாக பாதிக்கவில்லை.


பலஹீனமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அநியாயம் செய்யப்படும்போது, அந்த அநியாயக்காரர்களை எதிர்த்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஆனால் பாதிக்கப்பட்ட அந்த மக்களோ, எங்கள் இறைவா! அநியாயக்காரர்கள் வாழ்கின்ற இந்த ஊரை விட்டு எங்களை அப்புறப்படுத்துவாயாக்! மேலும் உன் புறத்திலிருந்து எங்களுக்கு ஓர் உதவியாளனையும் அனுப்பி வைப்பாயாக! என்று பிரார்தனை செய்கின்றார்கள். (அல்-குர்ஆன்)
 இது ஒன்றும் எதேர்ச்சையாக நடைபெற்ற கலவரமாக தெரியவில்லை, மாறாக நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம் என்பது பின்னரே தெரியவந்தது. கலவர நேரத்தில் காவல்துறை மூத்த அதிகாரிகளாக பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் தற்போதும் அன்று நடந்த விஷயங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் உளவுத்துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரின் வாக்குமூலம் படி 27 பிப்ரவரி 2002 அன்று குஜராத் முதலைமைச்சர் நரேந்திர மோடி காவல்துறை அதிகாரிகளை அழைத்து ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கலவரத்தில் ஈடுபடும் இந்துக்களை தடுக்க வேண்டாம் என்றும் முஸ்லிம்களுக்கெதிராக அவர்களது கோபத்தை அவர்கள் வெளிப்படுத்த அனுமதியளிக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டிருக்கிறார்.

ஆனால் இதனை நரேந்திர மோடி மறுத்து வருகிறார். குல்பர்கில் முன்னால் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃபரி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் இச்சம்பவத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரி ராகவனும் இத்தகைய கூட்டம் நரேந்திர மோடியால் நடத்தபடவில்லை என்று கூறுகிறார்.

எதுவாகினும் கலவரம் அதிகமாகிக்கொண்டே போனதோடு மட்டுமல்லாமல் மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டதோடு கலவரக்காரர்களுக்கே உதவியும் செய்திருக்கின்றனர். இந்தியா சந்தித்த மாபெரும் இனப்படுகொலைகளில் ஒன்றுதான் குஜராத்தில் 2002ல் நடைபெற்ற இனக்கலவரம். 3 மாதங்களுக்கு நீடித்த இந்த கலவரத்தில் 2000ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். தனிப்பட்ட விசாரணைக்குழுவால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மக்கள் நீதிமன்றம் இதனை விசாரிப்பதற்கும் ஓய்வு பெற்ற இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தது. நீதிபதி கிருஷ்ண ஐயர், பி.பி. சவந்த மற்று ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் ஹோஸ்பட் ஆகியவர்கள் கூறும்போது குஜராத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு முக்கிய காரணம் அம்மாநில முதலைமைச்சரான நரேந்திர மோடியும் அவரது அரசும் தான் என திட்டவட்டமாக அறிவித்தனர். அதே போன்று தெஹல்கா பத்திரிக்கையும் இதுதொடர்பாக விசாரணையில் இறங்கி கலவரக்காரர்களின் வாக்குமூலங்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்தனர். அவர்கள் அனைவரும் கூறும்போது நரேந்திர மோடிதான் தங்களுக்கு உறுதுணையாக இருந்தார் எனக்கூறினர்.


குஜராத் கலவரம் மதச்சார்பற்று விளங்கும் இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் கலங்கமாகும். எந்த கலவரமாக இருந்தாலும் சரி அது சிறியதோ, பெரியதோ அதனை தடுப்பதற்கான முயற்ச்சிகளில் தான் அரசு கவனம் செலுத்தவேண்டுமே தவிர அரசாங்கத்தின் துணையோடு எந்தக் கலவரமும் நடக்கக்கூடாது. ஆனால் குஜராத்தை பொறுத்தவரை அரசின் உதவியோடு கலவரக்காரர்கள் இனப்படுகொலைகளை அரங்கேற்றியுள்ளனர். இந்த மகாபாதக செயலை கண்டிக்காத நரேந்திர மோடி ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்று கூறி கலவரத்தை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டார். கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது முஸ்லிம்கள் தான் என்றும் அதற்கு பழி தீர்த்துக்கொள்வதற்காகத்தான் இந்துக்கள் முஸ்லிம்களை கொலை செய்தனர் என்று வெளிப்படையாகவே கூறினார்.
கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே எந்த விசாரணைக்கும் உத்தரவிடாமல் இதனை செய்தது முஸ்லிம்கள் தான் என்று பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார் நரேந்திர மோடி. பின்னர் பா.ஜ.கவும் விஹெச்பியும் மறுநாள் பிப்ரவரி 28 அன்று பந்திற்கு அழைப்பு விடுத்தது. அதனை தொடர்ந்து கலவரத்தை மூட்டுவதற்காகவும், இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக கோபப்படுத்துவதற்கும் தீ விபத்தில் உயிரிழந்த கரசேவகர்களின் உடல்கள் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. கலவரத்திற்கு பின் நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது நரேந்திர மோடியே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத்தின் வரலாற்றை பார்க்கும் போது எப்போதெல்லாம் இனக்கலவரம் நடைபெறுகிறதோ அதன் பிறகு நடத்தப்படும் தேர்தலில் பா.ஜ.கவே வெற்றி பெற்று வருகின்றனர்.

இவை அனைத்தையும் பார்க்கும்போது கலவரம் எதற்காக யாரால் நடத்தப்பட்டது என்பது தெளிவாக புலப்படுகிறது. 2002ஆம் ஆண்டுக்கு முன் குஜராத்தில் ஜில்லா தேர்தல் முதற்கொண்டு எல்லா தேர்தல்களிலும் பா.ஜ.க தோல்வியடைந்தது. இப்படியே சென்றால் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க தோல்வியை தழுவும் அபாயம் ஏற்பட்டது. எனவே இந்துக்களின் வாக்குகளை ஒருமைப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற இயலும் என்ற நிலை உருவானது. அதுநாள் பா.ஜ.கவின் முதலைமைச்சராக இருந்த பட்டேல் காலத்தில் பா.ஜ.கவிற்கு ஏற்பட்ட சரிவை சீர்செய்ய இந்துத்துவ சிந்தனை கொண்ட ஒருவரை முன்னிறுத்த முடிவு செய்தது பா.ஜ.க. அவ்வாறு தான் நரேந்திர மோடி தனது அரசியல் களத்தில் இனம் காணப்பட்டார். முதலமைச்சர் ஆனதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிலே தனி முத்திரை பதிக்கக்கூடிய இந்துத்துவ தலைவர் என்ற ரீதியில் பிரபலமடைந்தார். ஆனால் காலம் மாறி வரும் சூழலில் நரேந்திர மோடிக்கு எதிராக முக்கிய அரசாங்க ஊழியர்கள் இன்று போர்கொடி தூக்கி வருகின்றனர்.


குஜராத் கலவரம் மூலமாக கிடைத்த பாடம்


சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மற்ற கலவரங்களுக்கும் குஜராத் கலவரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கூற விரும்புகிறேன். குஜராத் கலவரம் மூலம் நமக்கு கிடைத்த பாடம் என்ன? குஜராத்தை போன்று இனியும் நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?


 ஜபல்பூர் கலவரம் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற மற்ற கலவரங்களுக்கும் குஜராத் கலவரத்திற்கு நிறை வித்தியாசம் உண்டு. குஜராத்தில் நடைபெற்றது வகுப்புவாத கலவரமல்ல மாறாக திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. இரு மதத்தைச்சார்ந்தவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற கலவரம் அல்ல, மாறாக நன்கு திட்டமிடப்பட்டு அரசு அதிகாரிகளின் உதவியோடு பெரும்பான்மை சமூக மக்களின் சில விரோதிகளால் நடத்தபட்ட தாக்குதலாகும். சில அமைச்சர்கள் கூட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு ஆணை பிறப்பித்தாகவும் கூறப்படுகிறது. இது போன்ற செயல்கள் இதற்கு முன்பு நடந்ததே இல்லை.

அரசு இயந்திரங்கள் கலவரத்தின் போதுமட்டுமல்லாமல், கலவரத்திற்கு பின்பும் ஒருதலைபட்சமாகவே நடந்துள்ளனர். அறை மனதுடனேயே நிவாரணம் முகாம்களுக்கு சென்று நிவாரணப்பணியை மேற்கொண்டனர். கலவரம் நடைபெற்று 10 வருடங்கள் ஆகியும் இன்னும் எத்தனையோ முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த கிராமத்திற்கும் வீட்டிற்கும் செல்ல முடியாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப்பணிகள் தொடர்பாக நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியபோது, பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் தொழிற்ச்சாலைகளுக்கு (முஸ்லிம் பெண்கள்) பின்னால் செல்ல முடியாது என்று கொச்சைப்படுத்தி பதிலளித்தார். கலவரத்தின் போது கர்ப்பிணியாக உயிர் பிழைத்த சில முஸ்லிம் பெண்கள் நிவாரணம் முகாம்களில் குழந்தைகளை பெற்றனர். இதனை விமர்சித்து இவ்வாறு நரேந்திர மோடி மேற்கூறியவாறு கூறியுள்ளார்.


கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கு விஷயத்திலும் ஈவு இரக்கமில்லாத செயலகளில் ஈடுபட்டது நரேந்திர மோடி அரசு. வீடுகளையும் கடைகளையும் முழுவதுமாக இழந்து தவித்த முஸ்லிம்களுக்கு ரூபாய் 500/- குறைவாகவே நிவாரணத்தொகைகளை வழங்கியுள்ளனர். நிவாரணத்தொகையை பெற மறுப்பவர்களை பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டி முழு பணமும் பெற்றுக்கொண்டதாக வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். தற்போது இது தொடர்பாக மோடி அரசுக்கு உயர் நீதிமன்றம் இடிக்கப்பட்ட வணக்கஸ்தலங்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது. முறையான ஆதாரங்கள் இல்லை என்று கூறி 300ற்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி அவை அனைத்து மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக பெஸ்ட் பேக்கரி வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள் அனைவருமே வி.ஹெச்.பி இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். சாட்சிகள் அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் சாட்சி சொல்வதற்கே அஞ்சினார்கள்.

குஜராத் கலவரத்திற்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக்குழுவை ஏற்படுத்தியது. குல்பர்கில் 63 நபர்கள் கொல்லப்பட்ட வழக்கிற்காகவும், முன்னால் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃபரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணைக்காக சிறப்பு விசாரணைக்குழு களம் இறக்கப்பட்டது. 1992-93ல் நடைபெற்ற மும்பை கலவரத்தின் போது கூட விசாரணைகள் இந்த அளவிற்கு தீவிரப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுவரை நடந்த கலவரங்களில் அது முடிந்து சில மாதங்களிலேயே மக்கள் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு சென்றுவிடுவர் ஆனால் குஜராத் கலவரம் முடிந்து 10 வருடங்கள் ஆகியும் இன்னும் நிவாரண முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குளறுபடிகளை வைத்துக்கொண்டு குஜராத் ஒளிர்கிறது என்றும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் குஜராத் என்றும் சிறந்த முதலமைச்சர் நரேந்திர மோடி என்று கூறுவதும் வேடிக்கையாக இருக்கிறது.


குஜராத் கலவரம் மூலமாக என்ன பாடம் படித்துக்கொண்டோம்? ஃபாசிஸ சங்கப்பரிவார கும்பல்கள் மதத்தை பயன்படுத்தி தங்களது கட்சியான பா.ஜ.கவை வெற்றி பெற வைக்கின்றனர். மதச்சார்பற்ற சக்திகளை ஒன்று திராட்டி இந்துத்துவாவிற்கு எதிராக போராட வேண்டும். பா.ஜ.கவை மட்டுமே குற்றம் சுமத்துவதற்கு இல்லை, இதற்கு காங்கிரஸ் கட்சியும் உடந்தை தான். பா.ஜ.க தீவிர இந்துத்துவ கொள்கை கொண்டது என்றால் காங்கிரஸ் மிதமான‌ இந்துத்துவா கொள்கை கொண்டது என்றே கூறலாம். இந்துத்துவ ஃபாசிஸத்திற்கு எதிராக போராடக்கூடிய பணியை நாம் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக எத்தகைய தியாகத்தினையும் செய்வதற்கு மக்கள் தயாராக வேண்டும்.


பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மதச்சார்பின்மை என்பது பலவீனமாக வருகிறது. மத்திய பிரதேசத்தில் இந்துக்களின் வழிபாட்டு முறையான சூரிய நம்ஸ்காரம் என்பது எல்லா பள்ளி மாணவ மாணவிகளிடத்தில் திணிக்கப்படுகிறது. இந்துத்துவாவின் அபாய கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தியாவில் இருக்கக்கூடிய கல்வி முறை அனைத்தும் மதச்சார்பற்றதாக மாற்றப்படவேண்டும். இனவாதம் என்கிற போர்வையில் பரவிவரும் ஃபாசிஸம் இந்த தேசத்திற்கே ஆபத்தானதாகும்.

அதிரையில் மூன்று வாலிபர்கள் கைது! ஒருவர் தலைமறைவு !



 
  கடந்த 26.2.12அன்று SDPI யின் சார்பாக திருவாரூரில் அகல ரயில் பாதை விசயமாக மறியல்
 நடைபெற்றது இதில் கலந்து கொள்ள சென்ற ஒருவரை சகோ.(தா மு மு க).தையுப் அவர்கள் தடுத்து
 நிறுத்தினார் என்ற காரணத்தால் சகோ.தையுப் அவர்களுக்கும் அதிரை SDPI இல்யாஸ் அவர்களுக்கும்
சிறிது கைகலப்பு ஏற்ப்பட்டது இது தொடர்பாக இரு தரப்பிலும் அதிரை காவல்துறையிடம் புகார் மனு 
அளிக்கப்பட்டது. 
    மறுநாள்(27/2/12) (தா மு மு க). தையுப் அவர்கள் தக்வா பள்ளி அருகில் இருக்கும் மார்க்கெட்டில்
 இருந்து நடுத்தெரு வழியாக பைக்கில் வந்து கொண்டு இருக்கும்போது முகமது,ரிஸ்வான்,நூருல்லாஹ்,
முகமது இலியாஸ், முகத்தை முடிக்கொண்டு பைக்கில் வந்து இரும்பு பைப்பால்  கொலைவெறி
 தாக்குதல் நடதினார்கள்  என்று  கூறபடுகிறது.
 இதனையடுத்து நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில்  
அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலைக் கண்ணன் அவர்கள் முகமது,ரிஸ்வான்,நூருல்லாஹ்
 முவரையும் கைது செய்துள்ளார், முகமது இலியாஸ்,அவர்களை வலை வீசி தேடிவருகிறார்கள்.

அதிரை ப்ளஸ்க்காக 
அதிரை அமானுல்லாஹ்  
thanks to adiraiplus.com

ஏலியன் வடிவில் பிறந்த அதிசயக் கன்றுகுட்டி



மாடுகள் ஈன்றெடுக்கும் கன்றுகள் சில நேரங்களில் இரண்டு தலையுடனும், வித்தியாசமான வண்ணங்களிலும் பிறந்திருப்பதைக் கண்டிருப்போம்.
ஆனால் தாய்லாந்தில் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள ஒரு மாடு ஏலியன் வடிவிலான கன்றினை ஈன்றுள்ளது.
மேலும் இறந்து நிலையில் பிறந்துள்ள இக்கன்றுக்கு அங்கு வாழும் மக்கள் தனது வித்தியாசமான சடங்குகளை செய்து வழிபடுவதைக் காணொளியில் காணலாம்.


துப்பாக்கியினால் சுட்டு தன்னைத்தானே பரிசோதித்த வினோத மனிதர்



பொதுவாக தன்னைத் தானே துப்பாக்கியால் சுடுவதற்கு அச்சம் கொள்ளும் மனிதர்களின் மத்தியில், இங்குள்ள வினோத மனிதர் சிறிதும் அச்சப்படாமல் தன்னையே துப்பாக்கியில் சுடுகின்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
இம்மனிதர் தான் அணிந்திருக்கும் குண்டு துளைக்காத ஆடையை பரிசோதித்து பார்ப்பதற்காக இந்த வேடிக்கையான முடிவை எடுத்திருக்கின்றார்.
எனினும் அதிர்ஷ்டவசமாக இவர் அணிந்திருந்த ஆடையும் முறையாக செயற்பட்டமையினால் எந்த வித ஆபத்தும் இன்றி, சிரித்த முகத்துடன் காணப்படுகின்றார்.

உலகையே அதிர்ச்சியில் அழ்த்தியுள்ள வேற்றுக்கிரக விமானம்



இதுவரை தாம் பல வேற்றுக்கிரக மனுதனர்களைக் கண்டதாகவும், அவர்கள் பறக்க பாவிக்கும் விமானங்களையும் தாம் கண்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.பல வீடியோக்களும் வெளியாகியுள்ளது. இருப்பினும் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ உலகையே அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. இக் காணொளியானது உண்மையாகப் படமெடுக்கப்பட்டது என அதனைப் பகுப்பாய்வுசெய்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இனி முடிவை நீங்களே எடுங்கள்.

மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடும் ஜெயலலிதா: அமெரிக்க அமைப்பு பாராட்டு

Jayalalithaசென்னை: உலகப் புகழ் பெற்ற அமெரிக்க அமைப்பான புரூகிங்ஸ் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி கட்டுரை வெளியிட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற அமைப்பான புரூகிங்ஸ் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த அமைப்பு அரசியல், சமூக, பொருளாதார ஆய்வுகளுக்கு பெயர் போனது. இந்நிலையில் இந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் வில்லியம் ஜே.அந்தோலிஸ் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

புரூகிங்ஸ் இணையதளத்தில் உள்ள அந்த கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள ஜெயலலிதா நிர்வாக ரீதியாக விரைந்து முடிவு எடுப்பவராகவும், மதிநுட்பம் மிக்கவராகவும் உள்ளார்.

மேலும் அரசியல் ரீதியான விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராகவும் திகழ்கிறார். தமிழ்நாட்டில் இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை சினிமா படமாக எடுத்தால் அந்த படங்களுக்கு ஸ்டார் வார்ஸ்-3, மீண்டும் ஜெயலலிதா என்றெல்லாம் பெயரிடலாம்.

தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருப்பது தெரிகிறது. அடிப்படை கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சற்று மந்தமான நிலையில் உள்ளது. எனவே அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தான் ஜெயலலிதாவின் அடுத்தக்கட்ட இலக்காக உள்ளது. 

சமீபத்தில் தமிழ்நாட்டில் பஸ் கட்டணம், பால்விலை போன்றவற்றை அவர் உயர்த்தினார். நிதிச் சுமையை சமாளிக்கவே அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். விலை உயர்வு காரணமாக ஓரளவு வருவாய் கிடைக்கும். அந்த நிதியை தமிழ்நாட்டில் கல்வித்துறையில் முதலீடு செய்ய ஜெயலலிதா உறுதியாக உள்ளார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

'ஷூ' அணிந்தபடி 'தூங்கினரா' கொள்ளையர்கள்?- எண்கெளன்டர் விவகாரத்தில் மாபெரும் முரண்பாடுகள்!

Chennai Encounterசென்னை: வேளச்சேரியில் ஐந்து கொள்ளையர்கள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட விவகாரம் இன்னும் அடங்கவில்லை. பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக கொள்ளையர்களில் ஒருவன் காலில் ஷூ இறுக்கமாக அணிவித்தபடி இருந்ததைப் பலரும் சுட்டிக் காட்டி இப்படித்தான் ஷூ போட்டு, ஜீன்ஸ் போட்டு ஒருவன் தூங்கிக் கொண்டிருந்திருப்பானா என்றும் கேட்கின்றனர்.

போலீஸ் என்கவுண்டர்கள் தமிழகத்திற்குப் புதிதல்ல. அவ்வப்போது நடந்தபடிதான் இருக்கிறது - மனித உரிமை ஆர்வலர்கள் இதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்ற போதிலும். ஆனால் இதுவரை இல்லாத பெரும் பரபரப்பையும், பலத்த சர்ச்சைகளையும் வேளச்சேரி என்கவுண்டர் கிளப்பி விட்டு விட்டது. காரணம் ஒட்டுமொத்தமாக ஐந்து பேரை, அதுவும் வட மாநிலத்தவர்களை போலீஸார் குட்டியூண்டு வீட்டுக்குள் வைத்து என்கவுண்டர் செய்ததால்.

ஒரு சாதாரண வீட்டு வசதி வாரிய வீட்டுக்குள்தான் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது. அது ஒரு சிங்கிள் பெட்ரூம் வீடு. வீட்டுக்குள் நுழைந்தால் வீடு முடிந்து விடும், ஒரு ரூமிலிருந்து அடுத்த ரூமுக்கு வந்தால், தெருவே வந்து விடும். அப்படி ஒரு தக்கனூண்டு வீட்டுக்குள் இருந்த ஐந்து பேரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட போலீஸார் கையில் பெரிய பெரிய துப்பாக்கிகளுடன் முற்றுகையிட்டும் உயிரோடு பிடிக்க முடியாமல் போய் விட்டதா என்பதுதான் மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைக்கும் மிகப் பெரிய கேள்வி.

போலீஸார் தேடி வரும் வினோத் குமார் என்ற கொள்ளையன் இந்த வீட்டுக்குள்தான் இருக்கிறான் என்று போலீஸாருக்குத் தகவல் வருகிறது. இதையடுத்து போலீஸ் படை துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் அங்கு விரைகிறது.

நள்ளிரவில் தகவல் வந்ததாக போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். ஆனால், 10 மணிக்கே அந்தப் பகுதியில் இருந்த வீடுகளையும் அணுகிய போலீஸார் கதவை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்குமாறும், வெளியே வரக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

பின்னர் அந்த வீட்டை முற்றுகையிடுகிறது போலீஸ் படை. முன்னெச்சரிக்கையாக வீட்டின் வெளிப்புறத்தைப் பூட்டி விடுகிறார்கள். பிறகு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கதவைத் தட்டுகிறது போலீஸ். உள்ளே இருந்தவர்கள் கதவைத் திறப்பதற்குப் பதில் ஜன்னல் வழியாக பார்க்கின்றனராம். போலீஸார் இருப்பதைப் பார்த்ததும் உஷாரான அவர்கள் ஜன்னல் வழியாக போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.

இதையடுத்து போலீஸார் முதலில் ஜன்னல் வழியாகவும், பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து சுட்டதாகவும், இதில் ஐந்து பேரும் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதுவரை நடந்தது ஒரு சம்பவத்தின் தொகுப்பு. இதுதொடர்பாக தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வரும் சந்தேகங்கள், கேள்விகள் குறித்துப் பார்ப்போம்...

1. இறந்த ஐந்து பேருமே பேண்ட்-சட்டை அணிந்தபடி இருந்திருக்கிறார்கள். மேலும் கால்களில் ஷூக்களும் உள்ளன. லேஸ் கூட கழற்றப்படாமல் கட்டியபடி இருக்கிறது. இப்படி இரவில் யாரேனும் தூங்குவார்களா என்பது முதல் சந்தேகம்.

2. வீட்டின் சுவற்றில் எந்தவிதமான ரத்தக்கறையும், ரத்தச் சிதறல்களும் இல்லை. மேலும் ஜன்னல் வழியாக கொள்ளையர்கள் சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அப்படிச் சுட்டதற்கான எந்தவிதமான வடுவும் இல்லை. ஒரு வேளை சுட்டிருந்தாலும் போலீஸார் திருப்பிச் சுட்டிருப்பார்கள்தானே. அப்படி சுட்டிருந்தால் ஜன்னல் கம்பிகள் சேதமடையாமலா இருந்திருக்கும். ஒரு வேளை ஜன்னல் கம்பிகளுக்குள் தோட்டாக்கள் லாவகமாக புகுந்து செல்லக் கூடிய வகையில் படு திறமையாக போலீஸார் சுட்டார்களா என்பது இன்னொரு சந்தேகம். விஜயகாந்த் படத்தில்தான் இப்படிப்பட்ட காட்சிகளப் பார்க்க முடியுமே தவிர நிஜத்தில் இது சாத்தியமில்லை.

3. ஐந்து பேரும் சுட்டார்கள், பதிலுக்கு நாங்களும் சுட்டோம் என்று போலீஸார் கூறுவதை ஏற்றுக் கொண்டாலும் கூட துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான எந்தவிதமான அறிகுறியும் தங்களுக்குத் தெரியவில்லை, துப்பாக்கி் சண்டை நடந்தால் சத்தம் கேட்குமே, அது கூட தங்களுக்குக் கேட்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதற்குப் போலீஸ் தரப்பு விளக்கம் என்ன?. (இதனால் வெளியில் எங்கேயோ வைத்து இவர்களை போட்டுத் தள்ளிவிட்டு இந்த வீட்டுக்குள் கொண்டு வந்து உடல்களை போட்டுவிட்டு, சம்பவம் அங்கு நடந்தது போல காட்டியிருக்கிறார்கள் என்கிறார்கள், இந்த எண்கெளன்டர் நாடகத்தை ஏற்க மறுப்போர்).

4. போலீஸார் கொள்ளையர்களை முற்றுகையிட்ட பின்னர் அப்பகுதியில் இருந்த வீடுகளை மூடிக் கொள்ளுமாறும், யாரும் எட்டிப் பார்க்கக் கூடாது என்றும் மக்களை எச்சரித்தது ஏன்?.

5. உள்ளே இருப்பது பயங்கரமான கொள்ளையர்கள் என்று போலீஸார் நம்பினால், அவர்களை உயிருடன்தானே பிடிக்க முயற்சித்திருக்க வேண்டும். அவர்களைப் பிடித்து விசாரித்தால்தானே அவர்களுக்கு எந்தெந்த குற்றத்தில் தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும். அப்போதுதான பல வழக்குகளுக்கு விமோச்சனம் கிடைக்கும். ஐந்து பேரும் பெரிய அளவிலான ஆயுதங்கள் வைத்திருந்ததாக தெரியவில்லை. அவர்களை, ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு நாமதான் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் தமிழக போலீஸாரால் உயிருடன் பிடிக்க முடியாமல் போனது ஏன். அது காவல்துறைக்கே அவமானமாக இருக்கிறதே. அட, மயக்க மருந்துப் புகையை உள்ளே செலுத்தியாவது பிடித்திருக்கலாமே...

இப்படி ஏகப்பட்ட கேள்விகளையும், சந்தேகங்களையும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள். ஆனால் போலீஸ் தரப்பி்ல இதற்குப் பதில் இல்லை. (முதல்வர் ஜெயலலிதாவும், சம்பவம் ஏதோ குஜராத்தில் நடந்தது மாதிரி இந்த சம்பவம் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் கனத்த அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது)

அதேசமயம், இது திட்டமிட்ட என்கவுண்டர்தான். இன்னும் சொல்லப் போனால் போலீஸார் வேண்டும் என்றேதான் ஐவரையும் கொன்றார்கள் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.

அதாவது சம்பவம் நடந்த புதன்கிழமை காலையே வினோத் குமார் போலீஸில் சிக்கி விட்டான். அவனை தங்களது கஸ்டடியில் வைத்து போலீஸார் விசாரித்தபோது உண்மைகளைக் கக்கியுள்ளான். தான் தங்கியிருந்த வீட்டையும் அவன் கூறியுள்ளான். இதையடுத்து மற்ற நால்வரையும் அள்ளிக் கொண்டு வந்த போலீஸார், ஐந்து பேரையும் விசாரித்து, பணம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் எங்கேயோ வைத்து ஐவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். பிறகு உடல்களை வேளச்சேரி வீட்டில் கொண்டு வந்து போட்டு செட்டப் செய்து விட்டனர் என்பது ஒரு வாதமாக உள்ளது.

இன்னொரு வாதம் என்ன சொல்கிறது என்றால், ஐந்து பேரையும் அதே வீட்டில் வைத்து வளைத்துப் பிடித்த போலீஸார், உள்ளே நுழைந்து ஐவரிடமும் விசாரணை நடத்தி, அவர்கள்தான் கொள்ளையர்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் உள்ளேயே வைத்து சுட்டு வீழ்த்தினர் என்கிறது. 

தமிழக அளவில் பெரும் காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியதாலும், பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாலும் ஆத்திரத்தில் போலீஸார் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது அந்த வாதமாகும்.

போலீஸ் தரப்பில் சிலர் இதுகுறித்துக் கூறுகையில், இது செட்டப்பா அல்லது இயற்கையானதா என்பது இப்போது பிரச்சனையில்லை. தயவு செய்து அதுகுறித்து யாரும் ஆய்வு செய்ய வேண்டாம். இனிமேல் இதுபோன்ற துணிகரக் கொள்ளைச் சம்பவங்களில் யாரும் ஈடுபட அஞ்ச வேண்டும். அதற்கு இது ஒரு வார்னிங் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களை அச்சுறுத்தும் வகையிலான குற்றச் செயல்களில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்ற அளவில் மட்டுமே பார்க்க வேண்டும். 100 கோடி பேர் இந்த நாட்டில் உள்ளனர். அவர்கள் நிம்மதியாக வாழ ஒரு ஐந்து கிரிமினல்கள் செத்துப் போவதில் தப்பில்லையே என்று 'நாயகன்' பட டயலாக் கணக்கில் கூறுகிறார்கள்!.

மக்கள் பணத்தை சுரண்டும் ஓநாய்கள் !

Game Show
 கேள்வி ஒன்று:
இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்?

நாய் அடிச்சான் காப்பி
கொசு அடிச்சான் காப்பி
ஈயடிச்சான் காப்பி
பேய் அடிச்சான் காப்பி

சாம்பிள் இரண்டு:


ஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது?

ஏகாதசி
பொங்கல்
விநாயக சதுர்த்தி
மெதுவடை


-இந்தக் கேள்வி பதில்களைப் படித்ததும், என்னய்யா கிண்டலா என கடுப்பாக உங்களுக்குள் கேள்வி எழுந்தால்... அதை அப்படியே இந்த வெட்கங்கெட்ட கேம்ஷோ நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் பக்கம் திருப்பிவிடுங்கள்!

கேள்விகள் கேனத்தனமாக இருக்கிறதே என்று நக்கலடித்தபடி, அடுத்த வேலைக்கு போய்விட்டால், நாம் முட்டாள்கள். அதற்குள் உள்ள மோசடியைப் புரிந்து கொண்டால், இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துபவர்களை முட்டாளாக்க ஒரு வாய்ப்பாவது உண்டாகும்.

இந்த கேவலமான கேள்வி - பதில் நிகழ்ச்சியின் பின்னால் விளையாடுகிறது பல கோடிரூபாய் மக்கள் பணம்.

வெறும் டிவி கேம்ஷோ மூலம் மட்டுமே இதுவரை ரூ 50 கோடி வரை நிகழ்ச்சி நடத்துபவர்கள் சம்பாதித்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. எப்படி... எல்லாம் பார்வையாளர்கள் மற்றும் ஆர்வக் கோளாறு நேயர்கள் மூலம்தான்.

இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள ஒரு எஸ்எம்எஸ் போட்டி வைத்தார்கள். அந்த போட்டிக்கு இங்கே நீங்கள் படித்ததை விட கேவலமான ஏழு கேள்விகளை, ஏழு நாள் கேட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் எஸ்எம்எஸ்கள். அதாவது ஒருவர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதாது... இரண்டு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பியதில் கிட்டத்தட்ட 5 கோடி எஸ்எம்எஸ் குவிந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு குறைந்தது ரூ 6 முதல் 9 வரை சார்ஜ் பண்ணுகின்றன மொபைல் நிறுவனங்கள்.

இப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ரூ 6 என்று வைத்துக் கொண்டால்கூட, எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே ரூ 30 கோடியை சம்பாதித்திருக்க முடியும். இது தவிர, ஸ்பான்ஸர்கள், விளம்பரதாரர்கள் தரும் பல கோடி ரூபாய்கள்...

ஒரு டிவி இந்த நிகழ்ச்சியை அறிவித்து கல்லா கட்டியதைக் கண்டதும், இன்னொரு முன்னணி டிவியும் ஒரு கோடி என்ற மயக்க பிஸ்கட்டை மக்கள் முன் நீட்ட ஆரம்பித்துள்ளது.

இது வர்த்தகம்தான் என்றாலும்... மிக சாமர்த்தியமாக மக்களைச் சுரண்டும் தந்திரம் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கும் அரசு, ஆன்லைன் லாட்டரிகள், ஒரு நம்பர் லாட்டரி, லாட்டரிச் சீட்டுகள், மூணு சீட்டு என பல்வேறு வகை சூதாட்டங்களையும் தாராளமாக அனுமதிக்கலாமே. பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழிகளில் இவையும் அடங்கும்தானே, என கோபக் கேள்விகள் எழுந்துள்ளன.

அரசின் 'கொர்ர்' தொடருமா, கலையுமா?
 asiananban.blogspot.in

ஈரானின் அடுத்த எச்சரிக்கை. உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம்.

உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம், ஈரான் கடும் எச்சரிக்கை.எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டதால் ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது அறிந்ததே.
இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலும் ஈரானைத் தாக்கப் போவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் மீது போர் தொடுக்கப்படுமானால் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என்று ஈரானின் இராணுவத்துறை அமைச்சர் ஜெனரல் அஹம்மது வதீதி எச்சரித்துள்ளார்.
"எங்களைத் தாக்கி அழித்துவிடலாம் என்று இஸ்ரேல் கருதினால் அது தப்புக்கணக்கு. அப்படி ஒரு தாக்குதல் எங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்டால், இஸ்ரேலை முற்றிலுமாக அழித்துவிடுவோம்." என்ற அமைச்சர் வதீதி எவ்வகையான தாக்குதல் என்பதைத் தெரிவிக்கவில்லை.
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் அமைச்சரின் பேட்டியால் மேலும் பதற்றம் கூடியுள்ளது.

இனி எங்களுக்கு அணு உலையே வேண்டாம் : ஜப்பான் அலறல் !

 டோக்கியோ: இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது. மேலும் இனி ஒரு அணுஉலை விபத்து வெடித்தாலோ, ஏற்கெனவே சேதமடைந்த புக்குஷிமா உலையிலிருந்து மீண்டும் கதிர்வீச்சு வெளிப்பட்டாலோ அதைச் சமாளிக்கும் நிலையில் ஜப்பான் இல்லை எனவும் அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் அணுஉலைகள் குறித்த மாயையில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு ஜப்பானின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று கூறிக் கொண்டு எக்கச்சக்கமாய் அணுஉலைகள் அமைத்த வளர்ந்த நாடுகள், இப்போது பயத்தின் விளிம்பில் நிற்கின்றன. செர்னோபில் கோரத்துக்குப் பிறகு தனது நாட்டில் அணு உலைகளையே அமைக்காமல் நிறுத்திவிட்ட ரஷ்யா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் மட்டும் அவற்றை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த அணுஉலைகளை அமைக்கிறது.

ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் புதிய அணுஉலைகளை இனி நிறுவுவதில்லை என அறிவித்துவிட்டன.

பீதியில் டோக்கியோவை காலி செய்ய தயாராக இருந்த ஜப்பான்..
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக புக்குஷிமா அணுஉலை சேதமடைந்த போது, அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்துவிட்டார்களாம்.

இந்த அணுமின் நிலையம் முற்றாக சேதமடைந்து, அதன் விளைவாக பெரும் சீரழிவுகள் ஏற்பட்டு தலைநகர் டோக்கியோ முழுவதையும் காலி செய்ய வேண்டிய ஒரு சூழல் கூட கடைசி தருணத்தில் தான் தவிர்க்கப்பட்டதாக இந்த பெரும் விபத்து குறித்த சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ள நிபுணர்கள் குழு கூறியுள்ளது.

இந்த அறிக்கைய எழுதிய குழுவின் தலைவரே இதனை மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.

"அணு உலை பாதுகாப்பு எனும் மாயையயில் சிக்கியிருந்த அரசாங்கம் இப்படியான ஒரு பேரழிவை எதிர்கொள்ள தயாரான நிலையில் இல்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும், நாட்டின் உணவுச் சங்கிலியில் கதிரியக்க பாதிப்பு இருக்கலாம் என்ற கவலை நீடிப்பதை ஜப்பான் அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த விபத்துக்குப் பிறகு புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதில்லை என்று ஜப்பான் முடிவுசெய்துள்ளது.

இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வராத புக்குஷிமா!

இதற்கிடையே, சுனாமி பாதிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும் இன்னும் புக்குஷிமா அணுஉலையின் கதிர் வீச்சு பாதிப்பு அகலவில்லை. இந்த அணுஉலை மையத்துக்குள் பணியாற்ற பணியாளர்கள் தயங்கி வரும் நிலையில், அணு உலையைக் குளிர்விப்பதற்கான நீரேற்றுப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

வெப்பம் அதிகரித்தாலும், ஒரேயடியாகக் குறைந்தாலும் உடனடியாக கதிர்வீச்சு பெருமளவு தாக்கும் ஆபத்து இன்னும் நீடிக்கிறதாம்.

சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு நேற்று இந்த நிலையத்தைப் பார்வையிடச் சென்றது. இந்த அணுஉலையின் இப்போதைய நிலை, இனி வரவுள்ள ஆபத்துகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

அணுஉலை செயல்படாத நிலையிலும், வெப்பத்தை கட்டுக்குள் கொண்டுவர, தினசரி பல மில்லியன் கேலன் தண்ணீரை செலுத்தி வருகின்றனர் பணியாளர்கள். இன்னொரு பக்கம், உலையிலிருந்து கதிர்வீச்சு மிக்க 10000 டன் நீர் மாதந்தோறும் இந்த உலையிலிருந்து கசிந்தபடி இருப்பதாகவும், இதைச் சுத்தமாக்குவது தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும் அணுஉலை நிர்வாகத்தினர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மட்டுமே 4வது அணு உலையிலிருந்து ஒரே நாளில் 8 டன் கதிர்வீச்சு நீர் (radioactive water) வெளியேறியதாகவும், இதுதான் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டதென்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

அணுஉலையிலிருந்து எரிபொருளை முற்றாக அகற்றும் வரை இந்த அச்சமான சூழல் நிலவும் என அதன் புதிய மேலாளர் தெரிவித்தார். இந்த உலையின் கசிவுகளை முற்றாக அடைக்க 6 வருடங்கள் ஆகும் என்றும், எரிபொருளை முழுமையாக அகற்ற 25 ஆண்டுகள் ஆகும் என்றும் புகுஷிமா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.