ரோல்ஸ்ராய்ஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய மஹாராஜாக்கள்

Rolls Royce Vintage Carஇந்தியாவுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனத்துக்கும் நீண்ட கால தொடர்பும், உறவும் உண்டு. இந்தியாவில் ஆங்காங்கே ஆண்டு வந்த சமஸ்தான மன்னர்கள் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வைத்திருப்பதை தங்களது அந்தஸ்தாக கருதினர். எனவே, ஒருவரையொருவர் பார்த்து போட்டி போட்டு தங்களது செல்வ செழிப்பை பரைசாற்ற ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்கி குவித்தனர். 20ம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளில் மட்டும் 800 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

ஆனால், மஹாராஜாக்களுக்கும், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்குமிடையிலான உறவில் பல்வேறு கசப்பான, சுவாரஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கோபத்தில் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை குப்பை வண்டியாக்கிய மஹாராஜா, தனது மனைவியின் செருப்பு கலரில் கார் தயார் சொன்ன மஹாராஜா என இந்த சுவாரஸ்யங்கள் நீள்கின்றன. அதனை ஸ்லைடரில் காணலாம். 


மஹாராஜாவுக்கு கோபம் வந்தால்...!  பாட்டியாலாவை சேர்ந்த மஹாராஜா பூபிந்தர் சிங் புத்தம் புதிய ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், அந்த ஆர்டரை ஏதோ காரணம் காட்டி ரோல்ஸ்ராய்ஸ் தட்டிக் கழித்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர் என்ன செய்தார்... 


குப்பை வண்டியாகிய ரோல்ஸ்ராய்ஸ் தன்னிடம் இருந்த பழைய ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் அனைத்தையும் பாட்டியாலா நகரத்தில் குப்பை வண்டிகளாக்கினார். இதை பார்த்து அதிர்ந்த ஆங்கிலேய அரசு உடனடியாக ரோல்ஸ்ராய்ஸிடம் கூறி மஹாராஜாவுக்கு புதிய காரை டெலிவிரி கொடுக்குமாறு அறிவுறுத்தியது.


பரத்பூரிலும் அதே கதைதான் இதேபோன்று, பரத்பூரை சேர்ந்த மஹாராஜா ஒவ்வொரு முறையும் 3 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து வாங்குவார். ஒரு முறை கார் பழுதடைந்ததை சரிசெய்ய ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு தகவல் அனுப்பியிருக்கிறார். ஆனால், மெக்கானிக்குகளை அனுப்ப ரோல்ஸ்ராய்ஸ் நிர்வாகம் மறுத்துவிட்டது. 


மிரட்டி சாதித்த ராஜா பாட்டியாலா போன்றே பழுது ஏற்பட்ட கார்களை குப்பை வண்டிகளாக்கப் போவதாக பரத்பூர் மஹாராஜா மிரட்டினார். இதனால், அதிர்ந்து போன ரோல்ஸ்ராய்ஸ் உடனடியாக மெக்கானிக் குழு ஒன்றை அனுப்பி கார்களை சரிசெய்து கொடுத்தது.


இந்த மஹாராஜா என்ன செய்தார்? அல்வார் மஹாராஜா புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவதற்கு விற்பனை பிரதிநிதியை அணுகியுள்ளார். ஆனால், புதிய காரை வழங்க முடியாது என அந்த ஆங்கிலேயர் ஏளனமாக தெரிவித்ததால் சினங்கொண்டார் ராஜா. உடனடியாக, 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை ஆர்டர் போட்டார். எதற்காக,,, 


ரோல்ஸ் டாப்பை கழற்றிய ராஜா 10 கார்கள் என்ற சந்தோஷத்தில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமும் சம்மதித்து கார்களை அனுப்பியிருக்கிறது. அந்த 10 புதிய கார்களும் கையில் கிடைத்தவுடன் அரண்மனையின் ஆஸ்தான ஆசாரிகளை கூப்பிட்டார். அனைத்து கார்களிலும் இருக்கும் கூரையை பிடுங்கி எறிந்துவிட்டு குப்பை வண்டியாக மாற்றினார். இது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்த சம்பவம்.


மைசூர் மஹாராஜா மைசூர் மஹாராஜா ஒவ்வொரு முறையும் 7 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை ஆர்டர் செய்து வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.


செருப்பு கலரில் ரோல்ஸ் கார் ஜாம்நகர் மஹாராஜா செய்த காரியம் அனைவரையும் திகைக்க வைக்கிறது. டிரெஸ் கலருக்கு தகுந்தவாறு பொட்டு, வளையல் போட்டுக் கொள்வது போன்று தனது மனைவியின் செருப்பு கலரில் கார் வேண்டும் என்று ரோல்ஸ்ராய்ஸ்க்கு ஆர்டர் செய்துள்ளார். செருப்பு கலரில் கொஞ்சமும் வித்தியாசம் தெரியக் கூடாது என்பதற்காக, ராணியின் செருப்பை ரோல்ஸ்ராய்ஸ் ஆலைக்கு அனுப்பி காரை வாங்கியிருக்கிறார்.


காருக்குள் ராணிக்கு மசாஜ் திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மஹாராணி சேது பார்வதியின் ரோல்ஸ்ராய்ஸ் காரில் எப்போதும் ஒரு சிறிய ஸ்டூல் ஒன்று இருக்கும். அந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டு ராணி தனது கால்களை மசாஜ் செய்ய சொல்வாராம். இருக்கையில் அமர்ந்து மசாஜ் செய்தால் வெளியாருக்கு தெரியும் என்பதற்காகவே இந்த ஸ்டூலாம்.


மன'தில்' கொண்ட மஹாராஜா ஆயிரம் ஆண்டுகள் நீண்ட பாரம்பரியம் கொண்டதாக உதய்பூர் சமஸ்தானம் குறிப்பிடப்படுகிறது. இதன் மஹாராஜாவாக இருந்த போபால் சிங் 1924ல் டூரர் ரோல்ஸ்ராய்ஸ் காரை பயன்படுத்தியிருக்கிறார். மேலும், ரோல்ஸ்ராய்ஸ் காரை அவர் மிகவும் நேசித்துள்ளார். தினமும் இந்த காரில் வேட்டையாடுவதற்கு செல்வது வழக்கம். அப்போது, படுவேகத்தில் காரை ஓட்டுவது அவருக்கு பிடித்தமான ஒன்றாக கூறுகின்றனர். ஆனால், அவரால் அதுபோன்று தொடர்ந்து காரை வேகமாக ஓட்ட முடியவில்லை. ஏன்...?


வாதம் வந்தாலும் பிடிவாதம்  போபால் சிங் வாத நோய் வந்து இடுப்புக்கு கீழே உறுப்புகள் செயலிழந்தது. அப்போது கூட அவர் தனது வேட்டையாடும் பழக்கத்தையும், கார் ஓட்டுவதையும் விட மனமில்லை. கைகளால் ஓட்டுவதற்கு வசதிகள் கொண்ட காரை அப்போதே ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்திடம் கஸ்டமைஸ் செய்து வாங்கி ஓட்டியிருக்கிறார். ஆனால், அந்த கார் ரிப்பேர் ஆனதால் தொடர்ந்து அவரால் ஓட்டமுடியவில்லை. இந்த கார் தற்போது மேம்படுத்தப்பட்டு அரண்மனையில் காட்சி பொருளாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்போதும், அழகு மாறாமல் ஏரி கரையில் நிமிர்ந்து நிற்கும் உதய்பூர் அரண்மனையின் வரலாற்றில் ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் கேரேஜும் வரலாற்றில் இடம் பிடிக்கிறது.


செவ்வாய் கிரகத்துக்கு ஹனி மூனுக்கு போறீங்களா?: ஜஸ்ட் ரூ. 5400 கோடிதான்

 Dennis Tito Proposes Ultimate Honeymoon Voyage To Mars திருமணமான புதுமணத்தம்பதிகள் ஹனிமூன் என்ற பெயரில் சில நாட்கள் தனியாக சென்று ஜாலியாக பொழுதை கழித்துவிட்டு வருவார்கள். 

தமிழ்நாட்டில் பிறந்த நடுத்தர வர்க்கத்தினர் ஊட்டி, கொடைக்கானல் என்று போனால் ஓரளவிற்கு வசதி படைத்தவர்கள் சிம்லா, குலு மணாலி என்று போய் அசத்துவார்கள். 

அதிக வசதி படைத்த பணக்காரர்கள் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு கூட ஹனிமூன் செல்வதுண்டு. ஆனால் செவ்வாய் கிரகத்திற்கு ஹனிமூன் அழைத்துச் செல்லும் புதியதொரு சுற்றுலா திட்டத்தை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மிகப்பெரிய கிரகம் செவ்வாய்

மார்ஸ் எனப்படும் செந்நிற கிரகமான செவ்வாய் ரெட் பிளானட் எனப்படுகிறது. சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கிரகம். இது சூரியனில் இருந்து 4-வது இடத்தில் பூமிக்கு அடுத்ததாக காணப்படுகிறது. 

உலக நாடுகளின் கவனம் 

தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது. இதுபோல் பல்வேறு உலக நாடுகளும் செவ்வாய் கிரகத்தை பற்றியே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. 

பூமியைப் போலவே பருவநிலை 

பூமியைப்போல செவ்வாய் கிரகத்திலும் மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் அதிக அளவு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் காணப்படுவது போலவே செவ்வாயிலும் பருவ நிலை சுழற்சி நிகழ்கின்றது. மலைகள், பள்ளத்தாக்குகள், கால்வாய்கள், எரிமலைகள், பாலைவனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இரண்டு நிலாக்கள் 

பூமிக்கு சந்திரன் துணைக்கோள் இருப்பதுபோல செவ்வாய் கிரகத்துக்கு போபோஸ், டெயிமோஸ் என்ற 2 துணைக் கோள்கள் உள்ளன. 

அபார்ட்மென்ட் கட்டும் அமெரிக்கா 

தற்போது செவ்வாயின் சுற்றுப் பாதையில் அமெரிக்காவின் 3 விண்கலங்கள் சுற்றி வருகின்றன. வருங்காலத்தில் அங்கு மனிதன் குடியேற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர். 

விண்வெளி சுற்றுலா 

அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் டிட்டோ என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனம் எதிர்காலத்தில் விண்வெளிக்கு மனிதன் சுற்றுலா செல்லும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்தது. இதற்கான ஒப்பந்தத்தை நாசாவுடன் இணைந்து செய்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் இது தொடங்கும் என்று அறிவித்தது. 

ஹனிமூன் திட்டம் தயார் 

தற்போது செவ்வாய் கிரகத்தில் தேனிலவு பயணம் செல்லும் திட்டத்தையும் அது அறிவித்துள்ளது. இதில் திருமணமான தம்பதி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கு தேர்வு செய்யப்படும் தம்பதிக்கு விண்வெளிப்பயணம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு செவ்வாய் கிரகத்துக்கு பயணம் தொடங்கும். 

அதிகமில்லை ரூ.5,400 கோடிதான் 

ஹனிமூன் மொத்தம் 501 நாட்கள் பயணம். இதற்கான செலவு ரூ. 5,400 கோடி என்றும் இன்னும் 5 வருடத்தில் இந்த திட்டம் தொடங்கும் என்றும் அதன் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்!!!

Brain Damaging Habitsஉடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் அந்த பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு ஏதேனும் தீர்வுகளை சொன்னால், அந்த தீர்வுகள் அனைத்து பிரச்சனைகளுக்குமே சரியாக இருப்பதில்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனைகள் அனைத்து வருவதற்கு நமது பழக்கங்கள் தான் முக்கிய காரணம். அதற்காக இந்த பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க முடியாது தான். ஆனால் பழக்கமாக கொள்ளாமல் இருக்கலாமே! ஏனெனில் பழக்கவழக்கங்கள் சரியாக இல்லாவிட்டால், தூக்கமின்மை, மூளையில் பாதிப்பு போன்றவை ஏற்படும். நாம் ஏற்கனவே தூக்கமின்மையை ஏற்படுத்தும் பழக்கங்களை பார்த்துவிட்டோம். ஆனால் உடலில் உள்ள முக்கியமான பகுதியான மூளையையும் ஒருசில செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது அத்தகைய மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள் என்னவென்று பார்த்து, அந்த செயல்களை அடிக்கடி செய்வதை தவிர்த்து, மூளைக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாமே!!!

புகைப்பிடித்தல் 

புகைப்பிடிப்பதால், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மூளையில் உள்ள சுருக்கங்கள் அதிகரிப்பதோடு, அல்சீமியர் நோயை உண்டாக்கும்.

உணவை தவிர்த்தல் 

சிலர் காலை வேளையில் உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அவ்வாறு உணவுகளை தவிர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது குறையும். இதனால் மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், மூளையின் செயல்பாடானது தடைபட ஆரம்பிக்கும்.

அதிகமாக சாப்பிடுவது உணவுகள் உடலுக்கு எப்படி ஆரோக்கியத்தை தருமோ, அதே சமயம் தீங்கையும் விளைவிக்கும், அவை அனைத்தும் உணவை உண்ணும் அளவிலேயே உள்ளது. ஆம், உணவை அளவாக உண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டால், பின் மூளைத் தமனிகளை கடினமடையச் செய்து, ஞாபக சக்தியை குறைத்துவிடும்.

அதிகப்படியான சர்க்கரை அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், பின் உடலில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் உடலில் உறிஞ்சாமல், உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கி, மூளை வளர்ச்சியை தடை செய்யும்.

காற்று மாசுபாடு உடலில் ஆக்ஸிஜனை அதிகம் உறிஞ்சுவது மூளை தான். ஆகவே மாசடைந்த காற்றை அதிகம் சுவாசித்தால், அது நேரடியாக இதயத்திற்கு செல்கிறதோ இல்லையோ அது மூளைக்கு தான் முதலில் செல்லும். இதனால் மாசுபட்ட காற்றினை சுவாசிப்பதால், மூளையின் செயல்திறனானது குறைந்துவிடும்.

தூக்கமின்மை நல்ல தூக்கம் இல்லாவிட்டால், நாள் முழுவதும் ஓய்வின்றி செயல்படும் மூளையானது சோர்ந்து, போதிய ஓய்வில்லாததால் மூளையில் உள்ள செல்கள் இறக்க நேரிடும். மேலும் தூங்கும் போது முகத்தை போர்வையால் போர்த்திக் கொண்டு தூங்கக் கூடாது. ஏனெனில் பின் மூளைக்கு வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், மூளையானது பாதிக்கப்படும்.

மோசமான நிலையிலும் வேலை உடல் நலம் சரியில்லாத நேரத்திலும் வேலை செய்வது அல்லது படிப்பது போன்றவற்றை மேற்கொண்டால், மூளையின் திறன் குறைவதோடு, மூளையும் பாதிக்கப்படும்.

குறைவாக பேசுவது அதிகமாக பேசுவதன் மூலம் மூளையின் செயல்திறனை மேம்படுத்த முடியும்.

லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் தரும் காரின் கனவு நிஜமாகிறது

Volkswagen XL 1இதுவரை கான்செப்ட் நிலையிலிருந்த லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் தரும் காரின் உற்பத்தி நிலை மாடலை ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கிறது ஃபோக்ஸ்வேகன். கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எஸ்போவில் எக்ஸ்எல்-1 என்ற கான்செப்ட் காரை ஃபோக்ஸ்வேகன் வைத்திருந்தது குறித்து ஏற்கனவே செய்தி வழங்கினோம். ஆனால், இந்த கார் உற்பத்தி நிலையை எட்டியிருப்பதுதான் இப்போதைய பரபரப்பு.
பரபரப்புக்காக மட்டுமின்றி கனவுகளை நிஜமாக்கும் விதமாக இந்த அதிக மைலேஜ் தரும்  காரை தற்போது நடைமுறையிலும் சாத்தியமாக்கியிருக்கிறது. ஃபோக்ஸ்வேகன். அதாவது 0.9 லிட்டர் பெட்ரோலில் இந்த கார் 100 கிலோமீட்டர்கள் தூரம் வரை செல்லும் என்பதுதான் ஹைலைட்.

ஹைபிரிட் கார்


அதிக மைலேஜ் தருவதற்காக இந்த காரை ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்டதாக வடிவமைத்துள்ளது ஃபோக்ஸ்வேகன். புதிய 2 சிலிண்டர் டீசல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இந்த மைலேஜ் அளவை தரும். இதில், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
எஞ்சின் பவர் 
இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் டீசல் எஞ்சின் 48 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.
எலக்ட்ரிக் மோட்டார்
இந்த காரின் எலக்ட்ரிக் மோட்டார் 27 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். லித்தியம் அயான் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரில் 50 கிலோமீட்டர் வரை பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல் மூலம் செல்லலாம்.
டாப் ஸ்பீடு 
இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். 0-100 கிமீ வேகத்தை 12.7 வினாடிகளில் கடந்துவிடும்.
ஏரோடைனமிக்ஸ் டிசைன்
அதிக மைலேஜ் தருவதற்காக தங்கு தடையின்றி செல்லும் விதத்தில் பிரத்யேக ஏரோடைனமிக் டிசைனை கொண்டிருக்கிறது. இந்த கார் வெறும் 795 கிலோ மட்டுமே எடை கொண்டது.
ஆச்சரியம், ஆனால் உண்மை இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தில் சீராக செல்வதற்கு 8.4 பிஎஸ் பவர் போதுமானது. அந்த அளவுக்கு சிறப்பான காற்றியக்கவியல் தத்துவத்தில் வடிவமைத்துள்ளனர்.
கார்பன் புகை வெளியீடு 
இந்த கார் கிலோமீட்டருக்கு வெறும் 21 கிராம் மட்டுமே கார்பனை வெளியிடும் என்பதால் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக கருதலாம்.
வடிவமைப்பு 3,888 மிமீ நீளம், 1,665 மிமீ அகலம் மற்றஉம் 1,153 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போலோவைவிட குறைவான உயரத்தை கொண்டிருக்கும்.
இன்டிரியர் 
அடுத்த தலைமுறைக்கான அம்சங்கள் கொண்டதாக இன்டிரியர்.
 
பத்தாண்டு கால முயற்சி 
கடந்த 2002ம் ஆண்டு முதன்முறையாக கான்செப்ட் மாடலாக ஃபோக்ஸ்வேகன் இந்த காரை அறிவித்தது. இந்த நிலையில், இத்துனை காலம் கழித்து உற்பத்தி நிலையை எட்டியிருக்கும் மாடலை ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. இந்த காரின் விலை உள்ளிட்ட விபரங்களை ஃபோக்ஸ்வேகன் இதுவரை வெளியிடவில்லை.

ஸ்ரீஹரிகோட்டா: 7 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.–சி20 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

ஸ்ரீஹரிகோட்டா: ஏழு செயற்கைக் கோள்களை சுமந்து செல்லக் கூடிய பி.எஸ்.எல்.வி.-சி.20 ராக்கெட் இன்று மாலை 6.01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் சுமந்து சென்ற 7 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் இணைந்தன. இதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரில் பார்வையிட்டு விஞ்ஞானிகளைப் பாராட்டினார். 

விண்ணில் ஏவப்பட இருப்பது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில் 23-வது ராக்கெட் . ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவு தளத்தில் இருந்து இது விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்தியா-பிரான்சு நாடுகள் இணைந்து தயாரித்துள்ள சரள் என்ற பிரதான செயற்கைகோளையும் 6 துணை செயற்கைக்கோள்களையும் இந்த ராக்கெட் ஏந்திச் செல்கிறது. 

சரள் செயற்கைக் கோள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்படும் 56-வது செயற்கைக்கோள் சரள் ஆகும். பிரதான செயற்கைக்கோளான சரளின் எடை 400 கிலோ. இது கடல்களைப் பற்றிய அறிவியல் ஆராய்ச்சிக்காகவும், கடல் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்கும் பயன்படும். சரள் செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். 

துணை செயற்கைக் கோள்கள் சரள் செயற்கைகோளுடன் கனடா, ஆஸ்திரியா, டென்மார்க், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 6 துணை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்படுகின்றன. கனடா நாட்டின் 148 கிலோ எடை கொண்ட சபையர் என்ற செயற்கைகோள், விண்வெளியில் இருந்து பூமியை பல்வேறு பரிமாணங்களில் படம் பிடிக்கும். கனடா நாட்டின் 74 கிலோ எடை கொண்ட நியோசாட் என்ற செயற்கைகோள், புவிவட்டப் பாதையில் பூமிக்கு அருகில் காணப்படும் சூரியனைச் சுற்றிவரும் குறுங்கோள் மற்றும் செயற்கைக்கோள்களை ஆய்வு செய்யும். ஆஸ்திரியா நாட்டின் வியன்னா பல்கலைக்கழகத்தின் 14 கிலோ எடை கொண்ட என்.எல்.எஸ். 8.1(யுனிபிரைட்) என்ற செயற்கைகோள் நட்சத்திரங்களின் வெப்பநிலை வேறுபாட்டை அளவிடும். ஆஸ்திரியா நாட்டின் கிரேஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 14 கிலோ எடை கொண்ட என்.எல்.எஸ்.8.2 (பிரைட்) என்ற செயற்கைகோள், வானில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்களை ஆய்வு செய்யும். டென்மார்க் நாட்டின் அல்போர்க் பல்கலைக்கழகத்தின் 3 கிலோ எடை கொண்ட என்.எல்.எஸ்.8.3 (ஆயுசாட்-3) என்ற மிகச்சிறிய செயற்கைகோள் ஆர்ட்டிக் பனிப்பகுதியில் கப்பல்களில் இருந்து தானியங்கி சமிக்ஞைகள் பெறுவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயும். இங்கிலாந்து நாட்டின் 6½ கிலோ எடை கொண்ட ஸ்டாண்ட்-1 என்ற செயற்கைகோள், விண்வெளி பகுதியில் செல்போன் இயக்கம் குறித்து மதிப்பீடு செய்யும். ஜனாதிபதி வருகை விண்வெளி பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 

ராக்கெட்டின் விண்வெளிப் பயணத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஆந்திர மாநில கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். இதற்காக இன்று பிற்பகல் 1 மணி அளவில் தனி விமானத்தில் சென்னைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்தார். அவரை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்றனர். ஆந்திரா அரசு சார்பில் அந்த மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் ஜனாதிபதியை வரவேற்றார். பின்னர், சென்னையிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஸ்ரீஹரிகோட்டா சென்றார். 

சிறிது தாமதம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்-20 மாலை 5.56க்கு விண்ணில் ஏவப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. வானிலையில் ஏற்பட்ட தடங்கலால் 5 நிமிடம் தாமதமாக 6.01க்கு விண்ணில் ஏவப்பட்டது. 7 செயற்கைக் கோள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சுமந்து சென்று விண்வெளியின் சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலை நிறுத்தியது. ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை மூத்த விஞ்ஞானிகளுடன் அமர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பார்வையிட்டார். பின்னர் வெற்றிகரமாக ராக்கெட்டை விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளுக்கு அவர் வாழ்த்துகளையும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.

சென்னையிலிருந்து பெங்களூருக்கு இனி 'டபுள் டெக்கர்' ரயிலில் போகலாம்... ஜில்லுன்னு!

சென்னை: சென்னை, பெங்களூர் இடையிலான டபுள்டெக்கர் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நேற்று நடந்தது. சென்னை - பெங்களூர் மார்க்கத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு டபுள் டெக்கர் ரயில் இயக்கப்பட்டது. பின்னர் அது நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் இந்த சேவையை தொடங்கவுள்ளது ரயில்வே. இப்போது இயக்கப்படவுள்ளது முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டதாகும். நேற்று இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதையடுத்து விரைவில் இந்த ரயில் தொடங்கி வைக்கப்படும்.

1500 பேர் பயணிக்கலாம்:

இந்த டபுள்டெக்கர் ரயிலில் 1500 இருக்கைகள் முன்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை பெங்களூர் மார்க்கம் எப்போதும் நிரம்பி வழியும் என்பதால் இந்த ரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

ஜிபிஎஸ் சாதனம் பொருத்தப்பட்டது: 

இந்த ரயிலில் பல அதிநவீன வசதிகள் பொருத்தப்பட்டு்ள்ளன. அதாவது ரயில் எங்கே போகிறது, வேகம் என்ன, அடுத்த நிலையத்திற்கு இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அறிய ஜிபிஎஸ் அடிப்படையில் இயங்கும் மின்னணு தகவல் பலகை அனைத்துப் பெட்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ளது.

மல்ட்டிபிள் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டது:

இந்த ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் மல்ட்டிபிள் ஷாக் அப்சார்பர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் பெட்டிகளில் எந்தவித அலுங்கலும், குலுங்கலும் இல்லாமல் பயணிகள் பயணிக்கலாம். அதேபோல அனைத்துப் பெட்டிகளிலும் தீயணைப்புக் கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கோச்சிலும் குட்டி கேன்டீன்:

இந்த ரயிலின் இன்னொரு விசேஷம், ஒவ்வொரு கோச்சிலும் சின்னதாக ஒரு கேன்டீன் இருப்பது. அங்கு ஜில் தண்ணீர், டீ, குளிர்பானம், சூப், ஐஸ்கிரீம் போன்றவை கிடைக்கும்.

உள்ளேயே மாடிப்படி:

ஒவ்வொரு பெட்டியிலும் 2 தளங்கள் உள்ளன. மேல் தளத்திற்குப் போவதற்கான படிக்கட்டுகள் அந்தந்த கோச்சுகளிலேயே உள்ளன.

மணிக்கு 160 கிமீ வேகம்:

இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகும். சென்னையிலிருந்து பெங்களூர் 362 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பயண தூரத்தை 6 மணி நேரத்தி்ல ரயில் கடக்கும்.


முதல் ரயில் ஹவுராவுக்கு:

ஏசி டபுள் டெக்கர் ரயில் முதலில் ஹவுரா- தான்பாத் இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் டெல்லி -ஜெய்ப்பூர் இடையேயும், அதன் பிறகு அகமதாபாத்-மும்பை இடையேயும் விடப்பட்டன. தற்போது சென்னை - பெங்களூர் இடையே அறிமுகமாகிறது.

தூத்துக்குடியில் சிறுமி சுட்டதில் தாய் பலி: விளையாட்டு விபரீதமானது!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 5 வயது சிறுமி ஏர்கன் துப்பாக்கியை வைத்து விளையாடிய போது குண்டு பாய்ந்து அவரது தாய் பலியானார். 

கொற்கை கிராமத்தில் வசித்து வரும் அந்தோணி ராஜ், அமலா தம்பதியினரின் மகள் 5 வயது சிறுமி கேத்ரின். அந்தோணிராஜின் இளைய சகோதரர் சில்வர்ஸ்டார் தனது துப்பாக்கியால் வேட்டையாடிய பறவைகளை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். துப்பாக்கியின் விசையை கேத்ரின் தற்செயலாக அழுத்த, குண்டு பாய்ந்து அமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த ஏரல் காவல்துறையினர், உயிரிழந்த அமலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியிடம் ஏர்கன் துப்பாக்கியை விளையாடக் கொடுத்த, அச்சிறுமியின் சித்தப்பாவின் நண்பரான ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் சில்வர்ஸ்டார் மற்றும் சிறுமி கேத்ரினிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நட்சத்திர ஹோட்டலாக மாறிய சிறைச்சாலை


நெதர்லாந்திலுள்ள புராதன சிறைச் சாலையொன்று அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆடம்பர ஹோட்டலாக மாறியுள்ளது.
1863 - 2007 இடைப்பட்ட காலப்பகுதியில் கைதிகளின் இருப்பிடமாக இருந்து வந்த சிறைச்சாலை நட்சத்திர ஹோட்டலுக்கு இணையான வசதிகளுடன் கூடிய 36 படுக்கையறைகள் உள்ளடங்கலாக காணப்படுகிறது.
இங்கு வருபவர்களுக்கு சிறைச்சாலையின் உணர்வு வருவதற்காகவே கம்பிகள், பாதுகாப்பு கேட்டுகள் எல்லாம் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறுவனின் வேகத்திற்கு இயந்திரங்க​ளே தோற்றுப்போ​ய்விடும் போலிருக்கே


இந்த சிறுவனின் வேகத்திற்கு இயந்திரங்க​ளே தோற்றுப்போ​ய்விடும் போலிருக்கேஇந்த சிறுவனின் வேகத்திற்கு இயந்திரங்க​ளே தோற்றுப்போ​ய்விடும் போலிருக்கே


நெதர்லாந்தில் காற்றில் மிதக்கும் மனிதர்


நெதர்லாந்தில் காற்றில் மிதக்கும் மனிதர்இந்திய பாரம்பரியத்தில் யோகா கலை பெரும் பங்கு வகிக்கின்றது. தற்போது இது மேற்குலக நாடுகளில் அதீத வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் செய்யும் செயல் பார்பவர்களை மிரள வைக்கிறது.
ரமணா என்பவர் தெருவோரத்தில் செய்யும் சாகசம் அவ்வழியில் செல்வோரின் கவனத்தை திருப்புகிறது. இவர் இந்திய மந்திரஜால முறையை பயன்படுத்தி சாசகம் செய்கிறார்.

வாயினால் ஊசிகளில் நூல் கோர்த்து சாதனை


வாயினால் ஊசிகளில் நூல் கோர்த்து சாதனைசீனாவைச் சேர்ந்த வான் ஃபுகுவன் (Wan Fuquan) எனும் நபர் ஒரு நிமிடத்தில் 101 ஊசிகளில் நூலினைக் கோர்த்து சாதனை படைத்துள்ளார்.

நான்கு ஆண்டுகளாக சாப்பிடாமல் வாழும் உயிரினம்


ஜப்பான் கடல் உயிரின காப்பகத்தில் பராமரிக்கப்படும் ஐசோபோட் எனப்படும் உயிரினம் கடந்த நான்காண்டுகளாக உணவு ஏதும் சாப்பிடாமல் ஆரோக்கியமாக உள்ளது.
ஜப்பானின் மீயி மாகாணத்தில் உள்ள டோபா கடல்வாழ் உயிரின காப்பகத்திற்கு, மெக்சிகோ கடல் பகுதியில் இருந்து 1 கிலோ எடையுள்ள 'ஐசோபோட்' உயிரினம் கடந்த 2007ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டிருந்தது.
கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த உயிரினத்திற்கு உணவு வழங்கப்பட்டது. 'மேக்கரல்' என்ற மீன் உணவை ஐந்து நிமிடத்தில் தின்று தீர்த்த இந்த உயிரினம் அதற்கு பின்பு 1,500 நாட்களாக எந்த உணவையும் உட்கொள்ளவில்லை.
வழக்கமாக தினமும் அதன் எடை அளவிற்கு உணவை உட்கொள்ளும் இந்த உயிரினம் நான்கு ஆண்டுகளாக சாப்பிடாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வழக்கம் போல் செயல்படுவதாகவும் கடல் உயிரின காப்பாளர்கள் கூறுகின்றனர்.

ராஜிவ் வழக்கில் தூக்கை நிறைவேற்றக் கூடாது: தூக்கு விதித்த நீதிபதி கருத்து

கோட்டயம்: ராஜிவ் கொலை வழக்கில் மூன்று தமிழரையும் தூக்கிலிடக் கூடாது என்று தூக்கு தண்டனை விதித்த நீதிபதியான கே.டி.தாமஸ் தெரிவித்துள்ளார். 

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு தலைமை வகித்தவர் கே.டி. தாமஸ். இருப்பினும் நளினி பெண் என்பதால் தூக்கு கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தார் தாமஸ். 

பின்னர் நளினிக்கு ராஜிவின் மனைவி சோனியா கருணை காட்டியதால் ஆயுள் தண்டனையானது. மற்ற மூன்று தமிழரும் தூக்கு மேடையில் நிற்கின்றனர். இந்த நிலையில் தூக்கு விதித்து தீர்ப்பளித்த நீதிபதி கே.டி. தாமஸ் கேரள மாநிலம் கோட்டயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர், ராஜிவ் வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட மூவருமே 22 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டனர். அவர்கள் ஆயுள் தண்டனைக் காலத்தைவிட கூடுதலான காலத்தை சிறையில் கழித்திருக்கின்றனர். இதனால் ஒரே குற்றத்துக்காக ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என இருவித தண்டனை விதிக்க முடியாது. அவர்கள் தங்களை தூக்கிலிடக் கூடாது என்று கோருவதற்கு அரசியல் சாசனத்தில் இடமிருக்கிறது. இதனால் மூவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

ஏற்கெனவே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான வி.ஆர். கிருஷ்ணய்யர், தூக்கு தண்டனையை இந்தியாவில் இருந்து அறவே ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அவர் மூன்று தமிழரையும் தூக்கிலிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறார். 

இந்நிலையில் மற்றொரு ஓய்வு பெற்ற நீதிபதியான கே.டி. தாமஸும் அதுவும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதியே தூக்கு கூடாது என்று கூறியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்















லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 400 குழந்தைகளை கொலை செய்துள்ளார். 

இங்கிலாந்து தேசிய ஆவண காப்பகம் 1770ம் ஆண்டு முதல் 1934ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 2.5 மில்லியன் வழக்குகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. 

அதன்படி பார்த்தால் எமிலியா டயர் என்ற பெண் தான் இருப்பதிலேயே அதிக கொலைகள் செய்து 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை கதிகலங்க வைத்துள்ளார். அவர் திருமணமாகாமல் குழந்தை பெறும் பெண்களைத் தேடிப் பிடிப்பார். 

அவர்கள் எமிலியாவுக்கு பணமும் கொடுத்து குழந்தையையும் தத்து கொடுத்துள்ளனர். ஆனால் அவர் பணத்தை வாங்கியவுடன் குழந்தையை டெய்லர்கள் அளவு எடுக்க பயன்படுத்தும் டேப்பை வைத்து கழுத்தை நெறித்துக் கொன்று உடல்களை தேம்ஸ் நதியில் வீசியுள்ளார். 

அவர் 30 ஆண்டுகளில் 400 குழந்தைகளை கொன்றுள்ளார்.

டிசி கைவண்ணத்தில் உருவான ஷாருக்கானின் நடமாடும் மாளிகை

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் வெளிப்புற படப்பிடிப்பின் போது கேரவன்களை பயன்படுத்துவது வழக்கம். சகல வசதிகளுடன் இருக்கும் கேரவன்தான் பிஸியாக இருக்கும் நட்சத்திரங்களுக்கு வீடாக பயன்படுகிறது. ஆனால், பாலிவுட் நட்சத்திரங்கள் எப்போதுமே ஆடம்பர பிரியர்கள். 

வீடாகட்டும், காராக இருக்கட்டும் எதுவாயினும் அதில் ஆடம்பரம் மிளிர வேண்டும். அந்த வகையில், ஷாருக்கானுக்காக ஆடம்பர பஸ் ஒன்றை பிரபல டிசி கஸ்டமைசேஷன் நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது. மாளிகை போல் காட்சி அளிக்கும் அந்த பஸ்சின் பிரத்யேக படங்கள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மல்டி ஆக்சில் பஸ்

இயக்குனர் ஷங்கர் படத்தில் வரும் கனவு பஸ் போன்று வெளிப்புறம் காட்சியளிக்கிறது.  மல்டி ஆக்சில் சேஸிஸ் கொண்டதால் 14 மீட்டர் நீளம் கொண்ட இந்த பஸ் சாதாரண பஸ்களை விட நீளம் அதிகம் கொண்டதாகவும், உட்புறத்தில் அதிக இடவசதியையும் கொண்டிருக்கிறது. ரூ.3.5 கோடி விலை மதிப்புடையதாக கூறப்படுகிறது.

ஓய்வுக் கூடம்

உட்புறத்தில் நுழைந்தவுடன் ஒரு பஸ்சில் ஏறிய உணர்வை மறக்கடிக்கிறது. சிறிய டேபிள், பெரிய எல்இடி டிவி, மெத் மெத்தென சோபாவுடன் மிக ஆடம்பரமாக இருக்கிறது. டாய்லெட், டைனிங் டேபிள் என இதர வசதிகளும் உண்டு.

வண்ண விளக்குகள் 

இந்த அறையை வைத்தே ஒரு ஷூட்டிங் நடத்து அளவுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உட்புறம் ஜொலிக்கிறது. சிறு அலுங்கல், குலுங்கல் இருக்காது. 3 மாதங்களில் இந்த பஸ்சை டிசி வடிவமைத்து கொடுத்துள்ளது.

மேக்கப் அறை

ஓய்வு அறைக்கு அருகிலேயே மேக்கப் அறை இருக்கிறது. டிராலியில் மேல் ஒரு சொகுசு சேர் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேக்கப் போட்டுக் கொண்ட டிவி பார்க்க முடியும். மேலும், அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்ட கூடத்தின் பாதியளவுக்கு நகர்ந்து வர முடியும்.

விருந்தினர் அறை 

சக நடிகர்கள் மற்றும் இதர விருந்தினர்கள் அமர வசதியாக ஓய்வு அறை தவிர்த்து மற்றொரு அறையும் உண்டு. அதிலும் டிவி இருக்கிறது. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி கருவி

மற்றொரு அறையில் உடற்பயிற்சி கருவி உள்ளது. அதனை மடக்கி வைக்க முடியும் என்பதோடு, பீரோ போன்று மூடி வைத்துக் கொள்ளும் வகையில் கதவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அங்கும் அமர்ந்து கொள்ள வசதியாக ஒரு சொகுசான சேர் போடப்பட்டுள்ளது.

எல்இடி டிவி

மிக அகன்ற திரை கொண்ட எல்இடி டிவி பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு கீழே சிடிக்கள் மற்றும் இதர பொருட்களை வைப்பதற்கான இடவசதியும் இருக்கிறது.