புகைப்பழக்கத்தை நிறுத்த ஆரோக்கியமான வழிகள்!!!

Healthy Alternatives Quit Smoking  புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. ஆனால் அதை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான செயல். பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைபிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளும் தெரியும், அதைவிட நிறுத்துவது கடினம் என்பதும் நன்றாக தெரியும். ஏனெனில் அதற்கு அடிமை ஆகிவிட்டால் அதை நிறுத்தும் போது பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். இவ்வாறு அதற்கு அடிமை ஆனவர்கள் நிறுத்த நினைக்கும் போது புதிதாக ஒரு சில பழக்கத்தை மேற்கொண்டால், ஈஸியாக அதனை நிறுத்தலாம். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
புகைப்பழக்கத்தை நிறுத்த சில டிப்ஸ்...
1. சிகரெட்டை நிறுத்த நினைப்பவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிகரெட் என்று ஒன்று உள்ளது. எப்படியென்றால் அந்த சிகரெட்டில் புகையிலை அல்லது நிக்கோட்டினுக்கு பதிலாக, ஒரு சில ஃப்ளேவரான புதினா அல்லது ஆசையைக் கட்டுப்படுத்தும் மெத்தனால் என்பவை இருக்கின்றன. இதனால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, மனநிறைவு அடையும் வகையில் இருக்கும்.
2. சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மெல்லலாம். அதற்காக அதிக நேரம் மென்றாலும் உடலுக்கு ஆபத்தானது. ஆகவே இனிப்பு குறைவாக இருக்கும் புதினா சுவையாலான சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மென்றால், சிறிது சுயக்கட்டுப்பாடானது மனதில் இருக்கும்.
3. புதினாவானது உடலுக்கு மிகவும் நல்லது. ஆகவே அவ்வாறு சூயிங்கம் போடும் போது, இந்த புதினா ஃப்ளேவரான சூயிங்கம் அல்லது சாக்லேட்டை சாப்பிடலாம்.
4. டார்க் சாக்லேட் மிகவும் சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. எப்போது புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சாக்லேட்டை சாப்பிட்டால் பசியானது அதிகரிப்பதோடு, வயிறு முழுவதும் உண்டுவிடுவர். மேலும் அந்த சாக்லேடில் உள்ள கோக்கோவானது, அதன் சுவையால் சிகரெட்டை மறக்கச் செய்துவிடும்.
5. நிறைய பேர் மிகவும் பிடித்த டூத் பிக்கை மெல்லுவார்கள். இது மிகவும் ஆரோக்கியமானது. அந்த டூத் பிக்கானது மூங்கில் அல்லது பிர்ச் மரத்தில் இருந்து செய்யப்படுவது. இதனை நீண்ட நேரம் மெல்லுவதால் பற்களில் உள்ள அழுக்கானது போய்விடும். இந்த டூத் பிக்கானது நிறைய ஃப்ளேவரில் உள்ளது.
6. சோம்பு, நட்ஸ் போன்றவற்றை வாயில் போட்டு மெல்லுதல் மிகவும் சிறந்த, ஆரோக்கியமான ஒன்று. நட்ஸில் பாதாம் கொட்டையை வாயில் போட்டு மென்றால் உடலுக்கு மிகவும் சிறந்தது.
7. எப்போதெல்லாம் புகைபிடிக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறதொ, அப்போதெல்லாம் 2-3 வாழைப்பழங்களை சாப்பிடலாம். இது புகைப்பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி.
இவற்றையெல்லாம் செய்தால் புகைப்பழக்கம் போவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: