சென்னை: சென்னையின் பிரபலமான அபிராமி திரையரங்க வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.சென்னை அபிராமி திரையரங்க வளாகத்தில் திரையரங்குகள் மற்றும் வணிகவளாகங்கள் இருக்கின்றன. இன்று காலையில் 2-வது தளத்தில் கேண்டீனில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இத்தீயானது அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது.
இதைத் தொடர்ந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. இத்தீ விபத்தில் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் தங்களது திரையரங்க வளாகத்தில் கேண்டீனில் மட்டும் தீ விபத்து ஏற்பட்டதாக அபிராமி திரையரங்க உரிமையாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.