இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர்...!

 Minister Absentia As Railways Runs Amok கொல்கத்தா: அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள், சற்றும் அலட்டிக் கொள்ளாத ஒரு ரயில்வே அமைச்சர். மிக்க கொடுமையான ஒரு அமைச்சரை நமது நாட்டு மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மக்களைப் பார்த்து பரிதாபம்தான் வருகிறது.
இந்திய ரயில்வேயின் அமைச்சராக எத்தனையோ பெரிய மனிதர்கள் இருந்துள்ளனர். ஒரே ஒரு விபத்து நடந்தது என்பதற்காக தனது அமைச்சர் பதவியை தார்மீகப் பொறுப்பேற்று உதறியவர் நிதீஷ் குமார். இன்றளவும் மக்கள் மனதில் அவர் நிற்கிறார். சமீப காலத்தில் மக்களுக்குத் தெரிந்த நல்லதொரு ரயில்வே அமைச்சர் அவர்தான்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக 2வது ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் பதவியேற்றுள்ள ரயில்வே அமைச்சர்கள் மக்கள் படாபாடு படுகின்றனர். காரணம், இந்த அமைச்சர்கள் யாருமே டெல்லியில் இல்லை. கொல்கத்தாவிலிருந்துதான் செயல்படுகின்றனர். டெல்லியில் உள்ள தங்களது அமைச்சர் அலுவலகத்திற்கே வருவதில்லை. எப்போதாவதுதான் வருகின்றனர்.
முதலில் மமதா பானர்ஜி ரயில்வே அமைச்சரானார். இவர் அமைச்சர் பதவியை ஏற்றது முதல் பதவியிலிருந்து போகும் வரை டெல்லி துறை அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்த்ததில்லை. ரயில்வே பட்ஜெட்டைக் கூட கொல்கத்தாவில் உட்கார்ந்துதான் போட்டார். இவர் டெல்லி அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அடுத்து இவர் போய் வந்த ரயில்வே அமைச்சரை அதே வேகத்தில் தூக்கி எறிந்தார் மமதா. தான் சொன்னதை அவர் கேட்கவில்லை என்பதே அதற்குக் காரணம். மமதாவைப் பகைத்துக் கொள்ள முடியாத பிரதமரும், மமதாவின் டியூனுக்கு ஆட நேரிட்டது.
அடுத்து வந்தவர்தான் முகுல் ராய். இவரும், தனது தலைவி வழியிலேயே செயல்பட்டு வருகிறார். டெல்லி பக்கமே இவரைப் பார்க்க முடிவதில்லை. எப்போதும் கொல்கத்தாவில்தான் அடை காத்தபடி கிடக்கிறார். ரொம்ப ரொம்ப அரிதாகத்தான் இவர் டெல்லிக்கே வருகிறார்.
முகுல் ராய் பதவியேற்றது முதல் அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள். எது குறித்தும் அவர் அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறை, ஊழியர்களின் கவனக்குறைவு என பல காரணங்கள் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு சாதனங்களை பொருத்துவதிலும் மகா அலட்சியமாக செயல்படுகிறது ரயில்வே துறை.
பாதுகாப்புக் குறைபாடு, ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக 2009-10ல் 69 சதவீத விபத்துக்களை இந்திய ரயில்கள் சந்தித்துள்ளன. இது 2010-11ல் 61 சதவீதமாகவும், 2011-12ல் 64 சதவீதமாகவும் இருந்துள்ளது.
கடந்த மார்ச் 20ம் தேதி பதவியேற்றார் முகுல் ராய். அன்றே உ.பியில் ஹத்ராஸ் அருகே நடந்த ரயில் விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மே மாதம் ஹம்பி எக்ஸ்பிரஸ் மற்றும் டூன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் விபத்தைச் சந்தித்தன. அப்போதும் முகுல் ராய் அலட்டிக் கொள்ளவில்லை. விபத்து தடுப்பு மற்றும் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனங்களை ரயில்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார் முகுல் ராய். ஆனால் இதுவரை அதுதொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2009ம் ஆண்டு மத்தியில் ரயில்வே அமைச்சகத்தை திரினமூல் காங்கிரஸ் பெற்றது. அன்று முதல் ரயில்வேயின் அன்றாடப் பணிகள், முக்கியத் திட்டங்கள் அனைத்துமே மேற்கு வங்கத்தை மட்டுமே மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன, செயல்படுத்தப்படுகின்றன. மற்ற மாநிலங்கள் குறித்து மமதாவோ அவரது கட்சியோ சற்றும் கவலைப்படுதில்லை என்று ரயில்வே உயர் அதிகாரிகளே குமுறுகின்றனர்.
ரயில்வே அமைச்சரே படு சோம்பேறியாக, அலட்சியமாக இருப்பதால் ரயில்வே வாரியம் பல பணிகளில் அக்கறை காட்டாமல் மெத்தனமாக இருக்கிறது. ரயில்வே துறை இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான காலகட்டத்தில் இருப்பதாகவும் உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ரயில்களில் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்துவது தொடர்பாக முகுல் ராய்க்கு முன்பு சில மாத காலம் ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி இருந்தபோது ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்திருந்தார். அதை முகுல் ராய் பரிசீலிக்கக் கூட செய்யாமல் நிராகரித்து விட்டார். அதேபோல ரூ. 20,000 கோடி செலவில் பல்வேறு பாதுகாப்புப் பணிகள் குறித்த அனில் ககோத்கர் அறிக்கையையும் கிடப்பில் போட்டு வைத்துள்ளார் முகுல் ராய்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ற வகையில் முறைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையாம்.
நேற்று நெல்லூரில் நடந்த விபத்தும் கூட மின்கசிவு காரணமாகத்தான் என்று கூறுகிறார்கள். அதேசமயம், ரயிலில் தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கக் கூடிய, அணைக்கக் கூடிய சாதனங்கள் எதுவும் இல்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று நெல்லூரில் அதிகாலை 4.30 மணிக்கு விபத்து நடந்தது. ஆனால் ரயில்வே அமைச்சராக இருந்த முகுல் ராய் கொல்கத்தாவில் உட்கார்ந்தபடியே பேசிக் கொண்டிருந்தார். அங்கிருந்து அவர் உடம்பை அசைத்து கிளம்பி நெல்லூருக்கு வந்து சேர 12 மணி நேரம் பிடித்துள்ளது. மக்கள் குறித்து எவ்வளவு அலட்சிய மனோபாவம் பாருங்கள் இந்த அமைச்சருக்கு...
தனது கட்சியினரோடும், முதல்வர் மமதாவோடும் அவர் நேற்று முழுக்க நேரத்தை செலவிட்டதாக கூறுகிறார்கள். ரயில் விபத்து நடந்து விட்டது, உடனே கிளம்ப வேண்டும் என்ற எண்ணமே இவருக்கு இல்லை என்கிறார்கள்.
ஏன் லேட் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சென்னைக்கு கொல்கத்தாவிலிருந்து முதல் விமானமே மாலை 3 மணிக்குத்தான். அதைப் பிடித்துதான் நான் வர வேண்டியிருந்தது என்றார். ஒரு வேளை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு விமானம் இல்லை என்றால் வந்திருக்கவே மாட்டாரோ என்னவோ...
முகுல் ராயின் நிர்வாகம் படு மோசமாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகளே புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இவர் ரயில்வே அமைச்சராகவே செயல்படவில்லை, மிகவும் மெத்தனமாக இருக்கிறார். எப்போது பார்த்தாலும் கொல்கத்தாவில்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், மமதாவை கேட்டுத்தான் எதையும் செய்கிறார் என்று புலம்புகின்றனர்.

குஜராத் கலவர வழக்கு - 21 பேருக்கு ஆயுள் தண்டனை . .



 குஜராத் கலவரத்தின் போது தீப்தா தர்வாஜா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கூட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் ஒருவருக்கு ஒரு ஆண்டுத் தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.சி. ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று விஸ்நகரின் தீப்தா தர்வாஜா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  65 வயதுடைய பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

குஜராத் கவலரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற 9 வழக்குகளில் தீப்தா தர்வாஜா கூட்டுக் கொலையும் அடங்கும். சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்புப் புலணாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

பின்னர் இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் 82 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சவா, 10 பேரை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தார். பாஜக தலைவர்கள் இருவர் உள்ளிட்ட மேலும் 51 பேரை சந்தேகத்தின் பலன் என்ற அடிப்படையில் விடுவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் கொலை செய்ததாகவோ அல்லது முன்விரோதம் இருந்ததாகவோ அறிய முடியவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்கள்  கொலை முயற்சி மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் விஸ்நகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கோசா பட்டேல் என்ற பிரஹலாத்பாய் மோகன்லால் பட்டேல், விஸ்நகர் நகராட்சியின் முன்னாள் தலைவர் தஹிபாய் பட்டேல் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் பாஜகவைச் சார்ந்தவர்கள். இக்கொலைச் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல்துறை முன்னாள் ஆய்வாளர் எம்.கே. பட்டேல் தன்னுடைய பணியைச் செய்யவில்லை என்ற அடிப்படையில் அவருக்கு ஒரு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவல்துறை முன்னாள் ஆய்வாளர் உள்பட அனைவருமே பட்டேல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

நெல்லூரில் தீப்பிடித்து எரிந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்... உயிரோடு கருகி 50 பேர் பலி!

 Fire On Tamil Nadu Express 25 Dead Several Injured
சென்னை: டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்துக் கொண்டது. இதில் ஒரு பெட்டி முழுக்க எரிந்து சாம்பலானது. இந்த திடீர் தீவிபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியிலிருந்து சென்னை வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது.
சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்ட இந்த ரயில் இன்று காலை ஏழே கால் மணிக்கு சென்னைக்கு வரவிருந்தது. ஆனால் நெல்லூரிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரயிலின் எஸ் 11 பெட்டியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் நல்ல தூக்கத்தில் இருந்துள்ளனர். தீயைப் பார்த்து பதறியடித்து எழுந்த சில பயணிகள் கூச்சலிட்டு மற்றவர்களை எழுப்ப முயன்றனர். மேலும், ரயிலிலிருந்து தப்பும் வழியையும் பார்த்தனர்.
ரயிலில் இருந்த இரண்டு கதவுகளையும் அவர்களால் திறக்க முடியவில்லை. இதையடுத்து அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுக்க முயன்றபோது அது செயல்படவில்லை. இதையடுத்து பக்கத்து கோச்சில் இருந்த பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதையடுத்து அவர்களின் உதவியுடன் சில பயணிகள் தப்பி வெளியேறினர்.
ஆனால், மளமளவென்று கொழுந்து விட்டு எரிந்த தீ பெட்டி முழுவதும் பரவி விட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் தீயில் சிக்கிக் கொண்டனர். சற்று நேரத்தில் பெட்டி முழுக்க தீப் பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதில் பலர் கருகிப் பலியானார்கள்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். அப்போது முதலில் தீயில் கருகிய நிலையில் 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தீக்காயங்களுடன் 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டன. தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில் மேலும் பலரது கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
தீவிபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் யார் என்பது இதுவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்பெட்டியில் பயணம் செய்தவர்களில் முக்கால்வாசிப் பேர் அப்படியே பெட்டியோடு கருகிப்போய்விட்டது அனைவரது நெஞ்சையும் உறைய வைத்திருக்கிறது.
சம்பவ இடத்தில் நெல்லூர் ஆட்சியர் ஸ்ரீதர் மீட்புப் பணிகளை மேற்கொண்டார். ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர்.

துபாயில் தமிழ்நாட்டு நோன்புக் கஞ்சி: ஈமான் நிர்வாகிக‌ளுக்கு பாராட்டு

Dubai Iman Functionaries Felicitated துபாய்: துபாய் ஈமான் அமைப்பு ஆண்டுதோறும் ர‌ம‌லான் மாத‌த்தில் தின‌மும் 3,000க்கும் மேற்ப‌ட்ட‌ நோன்பாளிக‌ளுக்கு த‌மிழ‌க‌த்து நோன்புக் க‌ஞ்சியினை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. இப்ப‌ணியினை மேற்கொண்டு வ‌ரும் ஈமான் நிர்வாகிக‌ளுக்கு 21.07.2012 அன்று மாலை பாராட்டு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்றது.
இந்நிக‌ழ்ச்சியில் த‌மிழ‌க‌த்திலிருந்து வ‌ந்திருந்த சென்னை உய‌ர் நீதிம‌ன்ற வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கோவை ந‌ந்த‌குமார், பொதுச் செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலிக்கு ஏல‌க்காய் மாலையினை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அத‌னைத் தொட‌ர்ந்து துணை பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
ஈமான் அமைப்பு மேற்கொண்டு வ‌ரும் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ப் ப‌ணிக‌ள் குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிக‌ழ்ச்சியில் ஈடிஏ அஸ்கான் துணை பொது மேலாள‌ர் அஹ‌ம‌து முஹைதீன், ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டு மேலாள‌ர் சைய‌து அபுதாஹிர், ஈமான் நிர்வாகிக‌ள் முதுவை ஹிதாய‌த், காய‌ல் யஹ்யா முஹ்யித்தீன், கீழை ஹ‌மீது யாசின், கும்ப‌கோண‌ம் சாதிக், வி.க‌ள‌த்தூர் ஷ‌ர்புதீன், வி.க‌ள‌த்தூர் சாகுல் ஹ‌மீது, திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன், கோவை இல்யாஸ், ப‌டேஷா ப‌ஷீர், ம‌துக்கூர் நூருல் அமீன், ம‌ண‌மேல்குடி அம்ஜ‌த் கான், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் கலந்து கொண்டனர்.

காய்கறி விற்கும் தாய்வான் பெண்ணுக்கு ஆசியாவின் நோபல் பரிசு


தாய்வானில் காய்கறி விற்கும் பெண்ணுக்கு நோபல் பரிசுக்கு நிகராகக் கருதப்படும் ராமன் மகசேசே விருது வழங்கப்படவுள்ளது. பிலிப்பைன்சின் மணிலா நகரில் இயங்கி வரும் ராமன் மகசேசே விருது அறக்கட்டளை, சமூக சேவைக்கான விருதை ஆண்டு தோறும் வழங்கிவருகிறது.
இவ்வாண்டு கம்போடியா, பங்களாதேஷ், தாய்வான், இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக காய்கறி விற்கும் இப்பெண்ணும் தெரிவாகியுள்ளார்.
இது குறித்து மகசேசே அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தாய்வானைச் சேர்ந்த சென் ச்சூ-சூ காய்கறி விற்பனை செய்து வருகிறார். ஆறாம் தரம் வரை மட்டுமே படித்துள்ள இவர் வீடின்றி வீதியோரம் உறங்குகிறார். ஆனால், தினம் தோறும் காய்கறி விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் பல சிறார்களின் அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி செய்கிறார்.
இதன் மூலம் தாய்வான் சிறார்களின் எதிர்காலத்தையே மாற்றியமைத்து வருகிறார். ஆயிரக்கணக்கான சிறார்கள், சென்னுடைய நிதியுதவியில் படித்துள்ளனர். இதுவரை 333,000  டாலருக்கு சிறார்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புறுபவர்களுக்கும் பாடசாலை நூலகங்கள் கட்டவும் இவர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார். இவரது சிறந்த சமூக சேவையைப் பாராட்டி மகசேசே விருது வழங்கப்படுகிறது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சென் தெரிவிக்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார். பிலிப்பைன்சின் முன்னாள் அதிபரின் பெயரால் ராமன் மகசேசே விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.




14 பிள்ளை பெற்ற நாடியாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பிரிந்த பாடிபில்டர்!

 Octomom Splits With Toyboy Lover Three Months Frankie அமெரிக்காவின் நாடியா சுலேமான் மீண்டும் ஒரு பரபரப்புச் செய்தியில் அடிபட்டுள்ளார். மூன்று மாதத்திற்கு முன்பு இவருக்கும், பாடபில்டர் ஒருவருக்கும் இடையே மலர்ந்த காதல் இப்போது முறிந்து போய் விட்டதாம். பாடி பில்டரால் நாடியாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லையாம். இதனால்தான் காதலை முறித்துக் கொண்டாராம் நாடியா.
அமெரிக்காவின் நாடியாவுக்கு மொத்தம் 14 பிள்ளைகள். இதில் 8 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்று சாதனை படைத்தவர். அத்தனையும் டெஸ்ட் டியூப் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 37தான் ஆகிறது. அடிக்கடி பரபரப்பான செய்திகளில் அடிபடும் நாடியா, சமீபத்தில் ஸ்டிரிப்டீஸ் நடனத்தை ஆடி அனைவரையும் அதிர வைத்தார். அவரது நிர்வாண உடலைத் தரிசிக்க பெரிய பெரிய புள்ளிகள் எல்லாம் ஆட்டத்தைக் காண வந்திருந்தனர்.
தற்போது கணவர் என்று யாரும் இல்லாமல் தனித்தே வாழ்ந்து வரும் நாடியா 3 மாதத்திற்கு முன்பு பாடிபில்டரான பிராங்கி என்பவரை காதலராக ஏற்றார். ஆனால் இந்தக் காதல் இப்போது முறிந்து போய் விட்டதாம். பிராங்கி வேண்டாம் என்று நாடியாதான் கூறி விட்டாராம்.
பிராங்கியை நாடியா காதலிப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து முதல் முறையாக அவர் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக கருதப்பட்டது. ஆனால் இதற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்து விட்டார் நாடியா.
நாடியாவின் வேகமான வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியவில்லையாம் பாடி பில்டரால். இதனால்தான் பிராங்கியை நிராகரித்துள்ளார் நாடியா என்கிறார்கள்.
ஆனால் பாடி பில்டரால்தான் நாடியாவைப் பிரிந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லையாம். இருந்தாலும் நாடியா, உடல் ரீதியான உறவு வேண்டாம் என்று கூறி விட்டதால் தற்போது இருவரும் வெறும் நண்பர்களாக மட்டும் தொடர்கிறார்களாம்.
பல்வேறு பொருளாதார சிக்கல்கள், குழந்தைகளை வளர்ப்பதில் பணப் பிரச்சினை, வீடு ஏலத்திற்கு வருவது என சிக்கல்களில் சிக்கித் தவித்தாலும் கூட நிர்வாண நடனம், அழகுபடுத்திக் கொள்ளுதல் என்று ஆடம்பரமாகவே வாழ்ந்து வருகிறார் நாடியா என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி?

 Plot Break Dmdk Through Premalatha Relative Woman சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவுக்குச் சொந்தக்காரரான சங்கீதா சீனிவாசன் என்பவர் மூலம் தேமுதிகவை உடைத்து அதிலிருந்து சில எம்.எல்.ஏக்களை அதிமுகவுக்குக் கொண்டு போக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் சுதாரித்துக் கொண்ட விஜயகாந்த், சங்கீதாவை உடனே கட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கி விட்டாராம்.
பிரேமலதாவின் தந்தை வழி உறவுக்காரப் பெண்தான் இந்த சங்கீதா. இவர் திருவள்ளூரில் வசித்து வருகிறார். திருவள்ளூர் மாவட்ட தேமுதிக மகளிர் அணிச் செயலாளராகவும் இருந்து வந்தார். தற்போது இவரை கட்சியை விட்டு தூக்கி விட்டார் விஜயகாந்த்.
சங்கீதா சீனிவாசன் தூக்கப்பட்டது தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பெரும் குசும்பில் சங்கீதா ஈடுபட்டதால்தான் அவரை கட்சியை விட்டுத் தூக்கியுள்ளார் விஜயகாந்த் என்கிறார்கள்.
இவர் மூலம் தேமுதிகவை உடைக்க அதிமுக தரப்பில் முயன்றதாகவும், அதை அறிந்துதான் சங்கீதாவை விரட்டியுள்ளார் விஜயகாந்த் என்கிறார்கள். பூந்தமல்லி அதிமுக எம்.எல்.ஏ மணிமாறனும், சங்கீதாவும் நல்ல நண்பர்களாம், நெருக்கமான பழக்கம் கொண்டவர்களாம். ஏதாவது பிரச்சினை என்றால் முதலில் மணிமாறனைத்தான் அணுகுவாராம் சங்கீதா.
அந்த வகையில் சமீபத்தில் மணிமாறனை அணுகிய அவர் அதிமுகவுக்கு வந்து விடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை கட்சியின் உயர் மட்டத் தலை ஒருவரிடம் அழைத்துச் சென்றாராம் சங்கீதா. அவரோ, இப்போதைக்கு கட்சிக்கு வர வேண்டாம். மாறாக, உனது கட்சியிலிருந்து சில எம்.எல்.ஏக்களை இங்கு கொண்டு வா, சிறந்த முறையில் உன்னை நாங்கள் கவனிக்கிறோம் என்று அட்வைஸ் செய்தாராம்.
இதையடுத்து தனது கட்சி எம்.எல்.ஏக்கள் சிலருக்கு வலை விரித்தார் சங்கீதா. ஆனால் அவரது வலை விரிப்பு குறித்து விஜயகாந்த் காதுகளுக்குச் செய்தி போய் விட்டது. இதை அறிந்து அவர் கொந்தளித்துப் போனார். உடனே சங்கீதாவை கட்சியை விட்டும், பதவியிலிருந்தும் தூக்கி விட்டார்.
ஆனால் தான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று கூறியுள்ளார் சங்கீதா. மேலும் தேமுதிகவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், பூந்தமல்லி மணிமாறனுக்கு எதிராக பிரசாரம் செய்தவள் நான். நான் எப்படி அவருக்கு நண்பராக இருக்க முடியும். இந்தக் கட்சிக்காக எனது கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு ரோடுரோடாக அலைந்து பிரசாரம் செய்துள்ளேன். யாரோ தப்புத் தப்பாக சொல்லியுள்ளனர். அதைக் கேட்டு என்னை நீக்கியுள்ளனர். இதை ஜனநாயகக் கட்சி என்று நினைத்திருந்தேன், ஆனால் இது ஒரு கம்பெனி போல செயல்படுகிறது என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன் என்றார்.
தேமுதிகவிடம் தற்போது 29 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்களில் சிலரை குறைந்தது ஒரு 7 பேரை கட்சியிலிருந்து இழுத்து விட்டால், விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து பறி போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைக்கருவிகளை காலினால் இசைத்து அசத்தும் இளைஞன்


உடலில் குறைபாடு உடையவர்களுக்கு கடவுள் அதனை நிவர்த்தி செய்யும் முகமாக ஏதோ ஒரு ஆற்றலை மேலதிகமாக கொடுத்திருப்பார் என்பார்கள்.
இதனை நிரூபிக்கும் வகையில் இரண்டு கைகளையும் இழந்த இளைஞர் ஒருவர் தனது கால்களால் மிகவும் அற்புதமான முறையில் ஹிட்டார் மற்றும் பியானோ போன்ற கருவிகளை இசைத்து அசத்துகின்றான்.



ஒலிம்பிக் அணிவகுப்பில் நடை போட்ட மர்மப் பெண் பெங்களூரைச் சேர்ந்த மதுரா ஹனி!

 India S Olympics Mystery Woman Revealed லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய அணியினர் நடந்து வந்தபோது அவர்களுடன் சேர்ந்து ஜீன்ஸ், டாப்ஸில் வந்த மர்மப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவர், அவரது பெயர் மதுரா ஹனி என்று தெரிய வந்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின்போது ஒவ்வொரு நாட்டு அணியினரும் தங்களது பாரம்பரிய உடையணிந்து அணிவகுத்து வந்தனர்.
இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில் குமார் தேசியக் கொடியேந்தி தலைமை தாங்கி நடந்து வந்தார். அவருடன் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகள் உடன் வந்தனர். அப்போது சுஷில் குமாருக்கு அருகே, ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து ஒரு இளம் பெண் வந்தார். இது இந்திய அணியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
யார் இந்தப் பெண் என்று அனைவரும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து இந்தியக் குழுவின் பொறுப்பாளரான மேஜர் முரளிதர் ராஜாவும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
இந்திய அணியுடன் நடந்து வந்த அந்த பெண் யார் என்று தெரியவில்லை. இது குறித்து நாங்கள் ஒலிம்பி்க் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி உள்ளோம். இந்திய அணியுடன் அவர் நடந்து வர யார் அனுமதி அளித்தார் என்று தெரியவில்லை. இந்திய அணியின் வீரர்கள், வீராங்கனைகள் உடன், அந்த மர்ம பெண் நடந்து வந்தது அணிக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
அணிவகுப்பில் இந்திய அணியுடன் அந்த பெண்ணும், மற்றொரு நபரும் நடந்து வருவதாக இருந்தது. ஆனால் அவர்களை அணிவகுப்பு களத்திற்குள் வர கூடாது என்று கூறியிருந்தேன். இதையடுத்து அந்த நபர் அணிவகுப்பிற்கு வரவில்லை. ஆனால் எங்களின் தடையும் மீறி மர்ம பெண் மட்டும் வந்துள்ளார்.
ஒலிம்பிக் அணிவகுப்பில், போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் இந்திய அணிவகுப்பு முழுவதும் அந்த பெண் நடந்து வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றார்.
இந்த நிலையில் அப்பெண் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், பெயர் மதுரா ஹனி என்றும் தெரிய வந்துள்ளது. தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் தனது தோழியுடன் ஊடுறுவு உள்ளே புகுந்துள்ளார். முதல் வரிசையில் மதுரா வர தோழி பின்தங்கி அப்படியே நின்றுள்ளார்.
ஒலிம்பிக் பாஸ் பெற்று அவர் உள்ளே புகுந்துள்ளதாக தெரிகிறது. இந்த பாஸை அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் கூட முதலில் பிரசுரித்திருந்தார். ஆனால் தான் அணியினரோடு நடந்து போனது சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த பக்கத்தை எடுத்து விட்டார்.

மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து குளத்தில் குதித்து தற்கொலை செய்த பெற்றோர்

காட்பாடி; கடன் தொல்லையால் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்த தாய்-தந்தை இருவரும் கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செங்குட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம்- மல்லிகா தம்பதியினரின் மகன் மதன்குமார், ஜவுளிக் கடை ஒன்றை நடத்தி வந்தார். மதன்குமாருக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜவுளிக் கடையுடன் கார் வாங்கி விற்கும் தொழிலையும் நடத்தினார். ஆனால் அதில் நட்டம் ஏற்பட்டது. இதனால் கடன் வாங்கினார். ஆனால் கொடுத்த கடனைக் கட்ட முடியாமல் மதன்குமார் கஷ்டப்பட்டுள்ளார்.
இதனால் கடந்த வாரம் பெற்றோருடன் தற்கொலை செய்து கொள்வதற்காக சென்னை மெரினாவுக்கு கடந்த வாரம் சென்றுள்ளனர். ஆனால் மருமகள்தான் சமாதானப்படுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் பெற்றோரும் மனைவியும் வீட்டில் இல்லாத நேரத்தில் அதிகாலையில் மனைவியின் சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த மதனின் பெற்றோர்
இதைப்பார்த்த அவரது தந்தை ஏகாம்பரம், தாயார் மல்லிகா இருவரும் கதறி அழுதவாறே தாங்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினர். இருவரும் அருகில் உள்ள திரவுபதியம்மன் கோவில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு மடங்கு பணம் தந்த ஏ.டி.எம் இயந்திரத்தினால் பரபரப்பு


இரண்டு மடங்கு பணம் தந்த ஏ.டி.எம் இயந்திரத்தினால் பரபரப்புஏ.டி.எம் இயந்திரங்கள் மூலம் எந்த நேரம் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். இந்த இயந்திரத்தில் ஏற்படும் கோளாறினால் சில நேரங்களில் எதிர்பாராத சம்பவங்களும் நடப்பதுண்டு.
லண்டனில் இப்ஸ்விச் என்ற இடத்தில் நேக்டன் சாலையில் ஒரு வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஒரு பெண் தனது கார்டை பயன்படுத்தி ரூ.3 ஆயிரம் எடுத்தார். அப்போது அந்த இயந்திரத்தில் இருந்து 2 மடங்கு பணம் வந்தது.
இதனால் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்த பெண், இந்த தகவலை தனது நண்பர்களிடம் தெரிவித்தார். அது அப்படியே பலரிடம் பரவியது.
எனவே அதில் பணம் எடுக்க ஏராளமான பொது மக்கள் திரண்டதால் கூட்டம் அலை மோதியது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே,  போலிசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ஏ.டி.எம் இயந்திரம் 2 மடங்கு பணம் தந்த விவகாரம் வங்கிக்கு தெரிய வரவே, உடனே ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து ஏ.டி.எம் இயந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்தினர்.
இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்த நபர்களை கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒலிம்பிக்கின் ஆரம்ப விழா புகைப்படத் தொகுப்பு


இலண்டன் 2012 ஒலிம்பிக் விழா சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவின் புகைப்படத் தொகுப்பு.