கொல்லம்: இத்தாலியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் வாலண்டைன் குடும்பத்தினரை நேரில் சந்திக்க இத்தாலிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஸ்டீபன் டீ மிஸ்துராவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸ்டீபன் டி மிஸ்துரா தலைமையிலான குழு கொல்லத்தில் முகாமிட்டுள்ளது. உள்ளூர் பாதிரியார் உதவியுடன் பலியான தமிழக மீனவர் வாலண்டைன் வீட்டுக்கு செல்வது பற்றி இத்தாலிய அமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஆனால் மீனவர் குடும்பத்தினர், இத்தாலிய அமைச்சரை சந்திக்க விரும்பவில்லை.
இதனால் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு வாலண்டைன் குடும்பத்தினரை சந்திக்க இத்தாலிய அமைச்சர் ஸ்டீபன் டீ மிஸ்ராவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்களை படுகொலை செய்த இத்தாலிய கடற்படையினர் இருவரையும் அமைச்சர் ஸ்டீபன் நேரில் சந்தித்துப் பேசினார்.
இதனிடையே காங்கிரஸ் ஆதரவு மீனவர் சங்கம் சார்பில் வாலண்டைன் குடும்பத்தினருக்கு ரூ2 லட்சம் நிவாரண நிதியை மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ் வழங்கினார்.