எங்க பசிக்கு ஓட்டு போடுங்க: வைகோ

Vaiko சங்கரன்கோவில்: பசியோடு இருப்பவர்களுக்கு தான் சோறு போட வேண்டும். எங்களுக்கு கடுமையான பசி உள்ளது. எனவே மதிமுக வேட்பாளருக்கு வாய்ப்பளியுங்கள் என வைகோ பேசினார். 

சங்கரன்கோவில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, 

இடைத்தேர்தலில் மதிமுக வெற்றி பெறுவதன் மூலம் சங்கரன்கோவில் தொகுதிக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கும் நன்மை கிடைக்கும். ரூ.50 கோடி வரை செலவு செய்து வெற்றி பெற்றால் அவர்கள் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும். செலவு செய்த பணத்தை 4 மடங்காக ரூ.200 கோடியாக எடுப்பார்கள்.

வாக்காளர்களை விலைக்கு வாங்க பணம் கொடுக்கின்றனர். மக்களை உயிராக நேசிக்கிறேன். நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் மாசோதா கொண்டு வந்த ஒரே எம்.பி. நான்தான். போலீசை கூப்பிட வேண்டும் என்றால் 100க்கும், தீயணைப்பு துறைக்கு 101ம், ஆம்புலன்சுக்கு 108ம் போன் செய்வதை போல வெளிநாட்டில் ஒரு பிரச்சனை என்றால் எனக்கு தான் போன் செய்கிறார்கள். பசியோடு இருப்பவர்களுக்கு சோறு போட வேண்டும். எங்களுக்கு கடுமையான பசி. எனவே, மதிமுக வேட்பாளருக்கு வாய்ப்பளியுங்கள். அதிமுக வெற்றி பெற்றால் எந்த அமைச்சரும் தொகுதி பக்கம் வரமாட்டார்கள்.

பணம் கொடுத்து வாக்குகள் பெறும் ஊழல் அரசியலை ஒழிக்க வேண்டும். சாதி, மத எல்லைகளைக் கடந்து போராடி வரும் மனித நேயத்துடன் விளங்கும் எங்களுக்கு வாய்ப்பளியுங்கள். பதவிக்காக ஏங்கி பேசவில்லை. எனக்கு பல முறை அமைச்சர் பதவி தேடி வந்தும் வேண்டாம் என்றேன். சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் பற்றி பேச வாய்ப்பளியுங்கள் என்றார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: