பிரபல மதுபான தொழிலதிபருக்குச் சொந்தமான பங்களா அது. அதன் உரிமையாளர் இப்போது உயிருடன் இல்லை. பழமையான அந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. பணியின்போது தொழிலாளர்கள் ஒரு அறையின் கூரைச் சுவரை கடப்பாரையால் உடைத்தனர். ![]() அப்போது கூரையில் இருந்து தங்கக் காசுகள் கொட்டத் தொடங்கின. சுமார் 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க காசுகள் புதையலாக கொட்டியுள்ளன. தங்கக்காசு ஒவ்வொன்றும் 20 டாலர் மதிப்புள்ளவை. அரசு அதிகாரிகள் அந்தப் புதையலைக் கைப்பற்றினர். அவர் தங்கக் காசுகளை எங்கு வைத்திருக்கிறேன் என்று உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ, எழுதி வைக்கவோ இல்லை. எனவே கட்டிடத்தில் வேறு எங்காவது தங்கம் இருக்குமா? என்பதும் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ![]() ![]() |
வீட்டின் கூரையிலிருந்து பொழிந்த தங்க மழை
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail


