கப்பல் படையினர் சிறையில் அடைப்பு: இந்திய தூதரை அழைத்து இத்தாலி கண்டனம்



தமிழக மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதற்கு , இத்தாலி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அமைச்சர், இந்திய தூதரை ‌அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளர். கேரளா அருகே அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அவ்வழியே சென்ற "என்ரிகா லக்சி' என்ற கப்பலின் பாதுகாவலர்கள்
சுட்டதில், இரு மீனவர்கள் பலியாகினர். இந்தச் சம்பவத்தில் இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். லதோர் மாசிமிலியானோ மற்றும் சல்வதோரே ஜிரோன் என்ற அந்த இருவரின் போலீஸ் காவல் கடந்த 5-ம் தேதி முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் இருவரும், கொல்லம் தலைமை ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் . நேற்று இருவரும் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இத்தாலி அமைச்சர் ஜியூலியோ டெர்ஸி, நேற்று, இந்திய தூதர் தேபாபிரதா ஷா வை ரோம் நகரில் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலி அமைச்சர் , இந்திய தூதரிடம் கூறுகையில், சர்வதேச கடல் எல்லையில் சம்பவம் நடந்துள்ளது. ஆகவே இத்தாலியி்ல் தான் வழக்கினை நடத்த வேண்டும். ஆனால் இந்திய கடல் எல்லையில் நடந்துள்ளது என இந்தியா கூறுகிறது. இந்த வழக்கினை இத்தாலிஒரு போதும் அங்கீகரிக்கவில்லை.தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது சரியல்ல.
ராணுவ அதிகாரிகள் என்பதால், தங்களுக்கு சிறையில் அனைத்து முன்னுரிமைகளையும், சலுகைகளையும் அளிக்க வேண்டும் இந்திய சட்டம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இது இத்தாலியின் இறையாண்மை சட்டத்திற்கு மாறானது. இவ்வாறு அமைச்சர் ஜியூலியோ டெர்ஸி கூறினார்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: