மேலும், இவை ஒரு மரத்திலிருந்து பல மீட்டார் தொலைவில் உள்ள இன்னொரு மரத்திற்குத் தாவிக் குதிக்கும். மரங்களில் வாழும் இந்தப் பாம்பு மிக வேகமாக மரங்களிடையே தாவிச் செல்லக்கூடியது. ஏறத்தாழ ஒரு மீட்டார் நீளம் கொண்டு காணப்படும் இப்பாம்பின் உடல் கருப்பு நிறத்தில் இருக்கும். அதில் ஆங்காங்கே மஞ்சள் மற்றும் வெண்மை நிறங்கொண்ட வளையங்களும், அவற்றின் நடுவில் பொட்டு வைத்தது போன்று சிவப்புப் புள்ளிகளும் காணப்படும். இவ்வாறு பல்வேறு வண்ணங்கள் நிறைந்த உடலைக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பு அணிகல மரப் பாம்பு என்றும் தங்க மரப் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு காணப்படும் பாம்புகளில் 50 அடி தூரத்திற்கு பறக்கும் பாம்பினைக் காணொளியில் காணலாம். |
50 அடி தூரம் பறக்கும் ”தங்க மரப் பாம்பு”
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail