இணையத்தளம் பார்வையிட்டார்கள் என ஆப்கான் யுவதிகள் மூவர் கொலை; பெற்றோருக்கு ஆயுட்கால சிறை .



இணையத்தளத்தைப் பார்வையிட்டார்கள் என்ற காரணத்துக்காக தனது மூன்று மகள்மாரையும் கொலை செய்த ஆப்கானிஸ்தான் தந்தையொருவருக்கும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதித்து கனடா, ஒஸ்ட்ரியோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் ஆடைகளை பயன்படுத்தாமை, ஆண் நண்பர்களுடன் பழகியமை, சமூகத்துடன் ஒன்றிப் பழகியமை மற்றும் இணையத்தள நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டமை உள்ளிட்ட விடயங்களைக் காரணங்காட்டியே மேற்படி மூன்று யுவதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மொஹமட் சப்பியா (வயது 58), அவரது மனைவி டுபா (வயது 42) மற்றும் அவர்களின் மகன் ஹமீட் (வயது 21) ஆகிய மூவருக்குமே கனடா நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்க தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது குறித்த மூன்று யுவதிகளையும் காரோடு நீரில் மூழ்கச் செய்து இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளார்கள் என்று சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதியாக்கப்பட்டதை அடுத்தே அவர்களுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் இந்த இரக்கமற்ற செயற்பாடு சமூகத்தின் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
manithan
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: