ஏரிப்புரக்கரை முஸ்லிம் சதவிகிதத்தை பிரித்து தன்னாட்சி செய்ய நினைக்கும்...


அதிராம்பட்டினம் அருகில் ஏரிப்புரக்கரைக்குட்பட்ட பிலால் நகர்,எம்.எஸ்.எம் நகர் என்கிற ஆதம் நகர் காந்திநகர் செம்படவன் தெரு, தொட்டியாம்பள்ளி, சாணாவயல்,சவுக்கொல்லை மற்றும் மீனவர்குடியிருப்பு பகுதிகளை கொண்டது. இப்பகுதியில் தற்பொழுது 60%
இந்துக்களும் 40% முஸ்லிம்களும் உள்ளனர். சென்ற ஆட்சியல் ஊராட்சி தலைவராக இருந்த சுப்ரமணியன் அவர்கள் சாணாவயல் மற்றும் சவுக்குகொல்லைகளின் வரிவாய்தாக்களை ஏரிப்புரக்கரை ஊராட்சியே வசூல்செய்து அந்த தெருக்களுக்கு தேவையான சிமெண்ட் சாலை, அடிப்படை வசதிகள் வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.
    

                        தற்பொழுது தலைவராக இருக்கும் ஜெயமாலா  முத்துகிருஷ்ணன அவர்கள் சாணாவயலையும், சவுக்குகொல்லையும் அதிராம்பட்டின பேரூராட்சிக்கு  தாரவார்த்துவிட்டார்கள். இந்த பகுதிகளை பிரித்துகொண்டே செல்வதனால் முஸ்லிம்களின் சதவிகிதம் குறைக்கப்பட்டு முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிராகரிப்படும் தருவாகையில் அரசியல் நடத்த திட்டம் தீட்டிக்கொண்டே செல்கின்றார்கள். 
                        சாணாவயலையும், சவுக்குகொல்லையும் நம்மில் ஓருவர் ஒருபொழுதும் ஊராட்சிமன்ற தலைவர் பதவி வகிக்கவே முடியாது சூழ்நிலையை ஏற்படுத்த கங்கணம்கட்டி நம்மை பிரித்தெடுக்கிறார்கள் என்பதுதான் உண்மையான செய்தி...
                      ஏரிப்புரக்கரை முஸ்லிம் சதவிகிதத்தை பிரித்து தன்னாட்சி செய்ய நினைக்கும் இவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் எஸ்.எச்.அகமது அஸ்லம் மற்றும் உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 நன்றி
www.adiraiplus.blogspot.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: