இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதியான வடக்கு வஸீரிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா(ட்ரோன்) விமான தாக்குதலில் 10பேர் கொல்லப்பட்டனர்.மிரான்ஷாஹில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள தாப்பி கிராமத்தில் வீட்டின் மீது 2 ஏவுகணைகள் தாக்கின. காயமடைந்தவர்கள் அருகிலுள்ளகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் நேற்று மதியத்திற்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டன. பலியானவர்கள் குறித்து மாறுபட்ட செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன. எல்லைப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் – நேட்டோ – ஆஃப்கான் ராணுவ தளபதிகளின் கூட்டம் நடைபெறுவதற்கு சற்று முன்பு இத்தாக்குதல் நடந்துள்ளது.