கன்னியாஸ்திரி வேடமிட்டு கோகைன் கடத்திய இளம்பெண்கள் கைது

 Cocaine Smuggling Nuns Arrested போகோட்டா: கன்னியாஸ்திரிகள் போல உடையணிந்து போதைப்பொருள் கடத்த முயன்ற மூன்று இளம்பெண்களை , கொலம்பியா நாட்டு காவல்துறையினர், சனிக்கிழமை அன்று கைது செய்தனர். 

கொலம்பியாவின் தலைநகரான போகோட்டா விமான நிலையத்திற்கு வந்த 3 இளம்பெண்கள் சான் ஆண்ட்ரேஸ்க்கு செல்வதற்காக காத்திருந்தனர். கன்னியாஸ்திரி போல உடை அணிந்திருந்தாலும் அவர்களிடையே ஒருவித பரபரப்பும் பதற்றமும் காணப்பட்டது. இதனைக் கண்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவர்களை விசாரித்தனர். 

அப்போது அவர்களின் கால்களில் கட்டி மறைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவர்களின் கன்னியாஸ்திரி அங்கியை அகற்றிய போலீசார் கோகைன் போதைப் பொருளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து அழ ஆரம்பித்த மூவரும், வறுமையினாலேயே போதைப் பொருள் கடத்துவதற்கு ஒத்துக்கொண்டதாக தெரிவித்தனர். 

சான் ஆண்ட்ரேஸ் பகுதி, நிகாராகுவா கடற்கரைப் பரப்பில் அமைந்துள்ள, வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பயணிகளை கவரும் பிரபலமான விடுமுறை வாசஸ்தலமாகும்.இங்கு போதைப்பொருள் வியாபாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவேதான் ஏராளமானவர்கள் சட்டவிரோதமாக போதைப்பொருளைக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: