அகர்தலா: சாக்லேட்டில் ஆணி இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் காட்பரீஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபருக்கு 30000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பொருட்களில் சாக்லேட்டும் ஒன்று. ஆரோக்கியமானதாக, சுகாதாரமானதாக இருக்க வேண்டிய இத்தகைய உணவுப் பொருட்களில் ஏதேனும் முறைபாடுகள் சிலநேரங்களில் கண்டறியப்படுவதும் உண்டு.
திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய மூன்று வயதுக் குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த காட்பரிஸ் சாக்லேட்டில் ஒரு இரும்பு ஆணி இருந்ததை கண்டு பிடிக்கப்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பால் சாக்லேட்... இங்கிலாந்தில் 1905 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது காட்பரிஸ் நிறுவனம். பாலிலேயே செய்யப்படும் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் உலக பிரசித்தி பெற்ற சுவையும், தரமும் உடையவை..
சாக்லேட்டில் ஆணி... 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய மூன்று வயதுக் குழந்தைக்கு வாங்கிக் கொடுத்தார். அந்த காட்பரிஸ் சாக்லேட்டில் ஒரு இரும்பு ஆணி இருந்ததை கண்டு பிடிக்கப்பட்டு அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார்.
நஷ்ட ஈடு... வழக்கை விசாரித்த திரிபுரா நுகர்வோர் நீதிமன்றம், சாக்லேட்டில் ஆணி இருப்பது நிரூபிக்கப்பட்டதால், காட்பரிஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.30,000 நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வழக்குச் செலவு... மேலும் வழக்கிற்கு ஆகும் செலவுத் தொகையான ரூபாய் ஆயிரத்தையும் காட்பரிஸ் நிறுவனமே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.