தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம்: போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு

தேனி: தேனி அருகே போலீஸ் ஸ்டேசனில் 3 நாட்கள் அடைத்து வைத்து பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள் மீது, சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தேனி மாவட்டம், கடமலைகுண்டு காவல்நிலைய போலீசார் வசந்தி என்ற பெண்ணை கற்பழித்ததோடு, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என 3 நாட்கள் காவல் நிலையத்திலேயே வைத்து சித்திரவதை செய்ததனர். அதோடு மட்டுமல்லாது போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராஜ்குமார் மற்றும் உதவி ஆய்வளர் அமுதன் ஆகியோர், அந்த பெண் மீதே பொய் வழக்கு போட்டனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. 

பாதிக்கப்பட்ட வசந்தி, தனக்கு நேர்ந்த கொடுமையை தமிழக முதல்வர், டி.ஜி.பி, எஸ்.பி. உள்ளிட்ட மேலதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். ஆனாலும் வசந்தி அலைக்கழிக்கப்பட்டார். வசந்தியின் புகாரை தமிழக காவல்துறை கண்டு கொள்ளவில்லை. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வசந்தி. 

வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், சம்பவம் நடந்து பதினைந்து மாதங்களாகியும், எப்.ஐ.ஆர். கூட போடாத தேனி மாவட்ட போலீசார் இந்த வழக்கை விசாரிக்க கூடாது எனக்கூறி, வழக்கை சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. 

சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராசாத்தி தலைமையிலான போலீஸார் கடந்த ஒரு மாதமாதத்திற்குள் தங்கள் விசாரணையை முடித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் வசந்தியிடம் நேரில் விசாரித்தபிறகு, சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது, கற்பழித்தல், அதிகார துஷ்பிரயோகம் செய்தல், பெண்ணை சித்தரவதை செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், மொத்தம் 16 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தேனி மாவட்ட காவல்துறையையே தலை குனிய வைத்திருக்கிறது. 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: