திருச்சி சிறையில் ராமதாஸ் மயக்கம்: ரத்த அழுத்தம் அதிகரிப்பு

 P T Arasakumar Slams Government The Pmk திருச்சி: திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இந் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், தகிக்கும் கந்தக பூமியான திருச்சி சிறையில் தூசி நிறைந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பதாக தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் பி.டி.அரசகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார். 

விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸை பி.டி.அரசகுமார் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது 

ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஏனென்றால் திமுக அதிமுக என இரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளுக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். 

கடலூர் சிறையில அடைக்காமல் கந்தக பூமியான திருச்சி சிறையில் பன்றிகள் கூட இருக்க முடியாத இடத்தில் அடைத்துள்ளனர். நீண்ட நாள் பயன்படுத்தாமல் இருந்த இந்த சிறைச்சாலையில் தூசி, குப்பை, நெடி இருப்பதினால் ராமதாஸ் மயக்கம் அடைந்து உடல் சோர்வாக உள்ளார். 

ஆனால், வெளியே ஒரு வன்முறை கூட்டம் பாமக என்ற பெயரில் வன்முறையை செய்ய காத்திருக்கிறது. காதல் நாடகத்தை தமிழ்நாடு முழுவதும் அடையாளப்படுத்தியதற்காகவே எனக்கு இந்த தண்டனை. என் குடும்பத்தினர் மீதும், யார் மீதும் வழக்குப் போட்டாலும் நான் பயப்படப்போவதில்லை. அதனை சந்திக்க தயார் என்று ராமதாஸ் கூறினார். 

தமிழக அரசு பாமகவை முடக்குவதற்காக அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை அடுத்தடுத்து கைது செய்துகொண்டிருக்கிறது என்று பி.டி.அரசகுமார் கூறினார். இவரும் பாமகவின் மாமலப்புரம் கூட்டத்தில் பங்கேற்று ஜாதிகளை முன் வைத்து கடுமையாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: