சிம்புவுக்காக சென்னை வந்த பிரபல 'ராப்' பாடகர் ஏகான்!

akon comes chennai simbu பிரபல ராப் பாடகர் ஏகான் கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார். காரணம்... நடிகர் சிம்புவின் லவ் ஆந்தம் பாடலைப் பாடுவதற்காக.

தனுஷின் காதல் தோல்விப் பாடலான கொலவெறி... ஹிட்டானதால், நடிகர் சிம்புவும் தன் பங்குக்கு ஒரு காதல் பாடலை உருவாக்குவதாகக் களமிறங்கினார்.

அந்தப் பாடலுக்கு முன்னோட்டம் கூட வெளியிட்டுவிட்டார். இப்போது பாடலை சர்வதேச அளவுக்குக் கொண்டு செல்ல, உலகளவில் புகழ்பெற்ற ஒரு பாடகரை அழைத்து வந்துள்ளார். அவர்தான் ஏகான். இன்றைய தேதிக்கு முன்னிலை ராப் பாடகர். கிராமி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றவர் ஏகான்.


கடந்த சனிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சென்னை வந்த ஏகானை விமான நிலையம் சென்று வரவேற்று அழைத்து வந்தார் சிம்பு.

அடுத்த நாளே ஸ்டுடியோவில் சிம்புவின் லவ் ஆந்தம் பாடலை பாடி முடித்துக் கொடுத்தாராம் ஏகான்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: